கோடை வெயிலில் சிக்கித் தவித்த தமிழகம் தற்போது மழைக்காலத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரலாறு காணாத அளவு வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டு தமிழக மக்களை வாட்டி வதைத்தது. மழைக் காலத்தில் குளுகுளுவென இருக்கப் போகிறோம் என்றாலும் திடீர் மழை வெளியே செல்பவர்களுக்கு பிரச்னையாக தான் இருக்கும். குறிப்பாக அலுவலகம் செல்லும் மழை பெய்தால், அன்றைய தினமே வீணாகிவிடும். அதற்கான தீர்வுகளை இங்கே பார்க்கலாம்.
மழைக்காலங்களில் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளது. அலுவலகம் செல்லும் வேகத்தில் தங்கள் ஆரோக்கியத்தில் பலரும் கவனம் செலுத்த தவறுகின்றனர். வெளியே செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. மழை காலத்தில் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடிய சில குறிப்புகளை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளை கேர் இன்ஸ்டிடியூர் ஆஃப் லைஃப் சயின்ஸ் (லக்னோ) டாக்டர் சீமா யாதவ் வழங்கியுள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இதையும் படிங்க: உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…
அதிகமாக காஃபின் குடிப்பதை தவிர்க்கவும்
மழைக்காலத்தில் டீ மற்றும் காபி குடிக்க அனைவரும் விரும்புவார்கள், ஆனால் டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. காஃபின் அதிகமாக உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது. காஃபின் அதிகமாக உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
இது உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை பிரச்சனைகளை ஏற்படுத்தும். காஃபினுக்கு பதிலாக, நீங்கள் சீரக நீர், சூப், கிரீன் டீ மற்றும் மஞ்சள் நீர் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கவும்
அலுவலகம் செல்வோர் பெரும்பாலும் ஸ்ட்ரீட் உணவுகளையே நம்பியிருக்கிறார்கள். ஆனால் மழைக்காலத்தில் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். குறிப்பாக வறுத்த உணவுகள்.
வெளியில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு தண்ணீர் சுத்தமாக இல்லாவிட்டால், உங்களுக்கு உணவில் விஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. சாலையோரங்களில் விற்கப்படும் மோமோஸ், சமோசா, சாட் போன்றவற்றை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், மழைக்காலத்தில் திறந்த வெளியில் விற்கப்படும் உணவின் மீது பூச்சிகள் மற்றும் கொசுக்கள் வந்து அமர்ந்து உணவுகள் மாசுபடுவதால் வெளியில் விற்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி மிகக் கட்டாயம்
அலுவலகம் செல்வோர் மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் உடலில் நெகிழ்வுத்தன்மையை வைத்திருக்கும் மற்றும் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும். உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, நோய்கள் வராமல் தடுக்கிறது.
மழைக்காலத்தில் தினமும் குறைந்தது 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, நடைபயிற்சி, ஜாகிங், கார்டியோ, ரோப் ஜம்பிங், ஜம்பிங் ஜாக் போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
கஷாயம் குடிக்கவும்
காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் நம்மை மிகவும் சோர்வடைய வைக்கும். எனவே ழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க, கஷாயத்தை குடிக்க வேண்டும். கஷாயம் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
கொத்தமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், இஞ்சி, அதிமதுரம், கருப்பு மிளகு ஆகியவற்றை அரைத்து, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும். சூடான கஷாயத்தை குடிப்பதால் சளி உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
மழைக்காலத்தில் ஓய்வு மிக முக்கியம்
இந்த பருவமழையில் நீங்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க விரும்பினால், ஓய்வெடுங்கள். அலுவலகம் சென்று வருபவர்களுக்கு ஓய்வெடுக்க போதிய நேரம் இருப்பதில்லை. ஆனால் போதுமான தூக்கம் இல்லாதது என்பது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: frequent cold and cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!
நீங்கள் குறைவாக தூங்கினால் உடல் சோர்வாக இருக்கும் நாள் முழுவதும் மனம் அலைக்கழிக்கப்படும். அதனால் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். வீடு திரும்பியதும் டிவி பார்ப்பதையோ, ஃபோனில் விளையாடுவதையோ குறைத்துவிட்டு, முழு நேரமும் தூங்குங்கள். இதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் பருவமழையில் நோய்வாய்ப்படாமலும் இருப்பீர்கள்.
image source: freepik