Acidity Causes And Symptoms: அசிடிட்டி அறிகுறிகள் மற்றும் விளைவுகள்

  • SHARE
  • FOLLOW
Acidity Causes And Symptoms: அசிடிட்டி அறிகுறிகள் மற்றும் விளைவுகள்


Acidity Causes And Symptoms: உங்கள் அடிவயிற்றில் இருந்து எழுந்து உங்கள் மார்பு வழியாக தொண்டையை அடையும் எரியும் உணர்வை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? இந்த நிலை அமிலத்தன்மை என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் எப்போதாவது அமிலத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். அதிக கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட உணவை உட்கொண்ட பிறகு, மிக விரைவாக படுப்பது இந்த அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன. அவை பின்வருமறு. 

அசிடிட்டி விளைவுகள்

அமிலத்தன்மை தொடர்ந்து நீடித்தால், உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. பித்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நெஞ்செரிச்ச்ல், வறண்ட இருமல், இரைப்பை அலெற்சி, உணவு விழுங்குவதில் சிரமம் மற்றும் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 

இதையும் படிங்க: மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?

அசிடிட்டி அறிகுறிகள்

அடிக்கடி நெஞ்செரிச்சல்

வாரத்திற்கு 2 முறைக்கு மேல் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், அது சாதாரணமானது அல்ல. வயிற்றில் தொடங்கி, தொண்டை வரை நீண்டு, எரிச்சல் உணவு உட்கொண்ட பிறகு பொதுவாக ஏற்படுகிறது. 

காலையில் குமட்டல்

வயிற்று அமிலம் மீண்டும் வாய் மற்றும் உணவுக்குழாய்க்கு செல்கிறது. இது குமட்டல் மற்றும் வாயில் ஒரு கெட்ட புளிப்பு சுவைக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக இவை காலை நேரத்தில் ஏற்படுகிறது. 

நாள்பட்ட உலர் இருமல்

விவரிக்கப்படாத இருமல், இரவில் அதிகரிக்கும் அமிழத்தன்மை நோயின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும்.

கரகரப்பு

ஆசிட் ரிஃப்ளக்ஸ் தொண்டையில் கரகரப்பை ஏற்படுத்துகிறது. இதனால் காரணமின்றி தொண்டை புண் ஏற்படலாம்.

நெஞ்சு வலி

அடிவயிற்றில் தொடங்கும் வலி அமில வீக்கத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். இருப்பினும், எந்த காரணத்திற்காகவும் உங்கள் மார்பில் வலி அதிகரிப்பதாக உணர்ந்தால், விரைவில் மருத்துவ உதவியைப் பெறுவது நல்லது.

வாய் துர்நாற்றம்

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் மற்றும் தவறாமல் ஃப்ளோஸ் செய்தாலும், உங்கள் துர்நாற்றத்தை மறைக்க புதினா மற்றும் சூயிங்கம்களை தொடர்ந்து பயன்படுத்துவது போல் இருக்கிறதா. இது அமிலத்தன்மையின் ஒரு அறிகுறியாகும். 

குறிப்பு

ஆரோக்கியமான எடையை பராமரித்தல், வயிற்றைச் சுற்றி இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்தல், சிறிய மற்றும் அடிக்கடி உணவு உண்ணுதல், படுக்கையில் தலையை உயர்த்தி படுத்தல், காரமான உணவுகளை உண்ணாமல் இருப்பது உள்ளிட்ட சில வாழ்க்கை முறை மாற்றங்கள் அமிலத்தன்மையை போக்க மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை நீங்கள் கண்டால், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

Image Source: Freepik

Read Next

Tooth Decay: தீரா பல் வலியை தடுக்க உகந்த வைத்தியம்!

Disclaimer

குறிச்சொற்கள்