பெரும்பாலான வீடுகளில் தேங்காய் அன்றாட சமையல்களில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. உணவின் சுவையை அதிகரிக்கும் தனித் தன்மை தேங்காய்க்கு உண்டு. பச்சை தேங்காய் மற்றும் காய்ந்த தேங்காய் இரண்டும் நம் சமையலறைகளில் எப்போதும் இருக்கும். தென்னிந்தியர்களைப் பொறுத்தவரை பொரியல், கூட்டு, குருமா, சில வகை சாம்பார் ரெசிப்பிகளில் கூட தேங்காய் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும், பச்சை தேங்காய் அளவிற்கு, உலர் தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. எனவே இப்போது நாம் உலர்ந்த தேங்காயின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்க்கப்போகிறோம்…
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
100 கிராம் உலர்ந்த தேங்காயில்,
- கலோரிகள்: 354 கிலோ கலோரி
- கார்போஹைட்ரேட்டுகள்: 24 கிராம்
- நார்ச்சத்து: 9 கிராம்
- சர்க்கரை - 6.2 கிராம்
- புரதம் - 3.3 கிராம்
- கொழுப்பு - 33.5 கிராம்
- வைட்டமின்கள்: பி6, நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட சிறிய அளவிலான பி வைட்டமின்கள் உள்ளன.
- தாதுக்கள்: இரும்பு, மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்தவை
உலர் தேங்காயை தினமும் உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தேங்காய் பாலுடன், தேங்காய் தண்ணீரும் ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே தேங்காய் உடலுக்கு ஆற்றலை வழங்குவதில் திறம்பட உதவுகிறது.
குறிப்பாக குளிர்காலத்தில் உலர் தேங்காயை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் சளி தொடர்பான தொற்றுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நினைவாற்றலை மேம்படுத்தும்:
தேங்காயில் நார்ச்சத்து, மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நினைவாற்றலை மேம்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மூளை செல் பிரச்சனைகளும் எளிதில் நீங்கும்.
குறிப்பாக ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேங்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதன் ஊட்டச்சத்து பண்புகள் இரும்புச்சத்து குறைபாட்டையும் சரி செய்யும்.
பெண்களுக்கு இவ்வளவு நல்லதா?
ஆண்களை விட பெண்கள் உலர் தேங்காயை உட்கொள்வதால் அதிக பயன் பெறுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற சத்துக்கள் பெண்களின் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது செரிமான பிரச்சனைகளில் இருந்து எளிதாக நிவாரணம் அளிக்கிறது மற்றும் மலச்சிக்கல் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளுக்கு எதிராக பாதுகாக்கிறது.
அல்சருக்கு அருமருந்து:
வயிற்றுப் புண்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இது போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு தேங்காய் மிகவும் உதவியாக இருக்கும்.
இதய நோய்கள் வராமல் தடுப்பதுடன், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை எளிதில் கரைக்கும். எனவே தேங்காயுடன் உலர் பழங்களைச் செய்து லட்டுகளாகச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.