Yellow pumpkin benefits for skin: பூசணிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது நம்மில் பலருக்கு தெரியும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். ஆனால், இது ஆரோக்கியத்துடன், உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், பூசணிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தை இயற்கையாக பளபளக்கச் செய்ய உதவும். வைட்டமின்-சி, வைட்டமின்-ஏ, மெக்னீசியம், பீட்டா கரோட்டின், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய கூறுகள் இதில் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பூசணிக்காயை உட்கொள்வதன் மூலம் சருமத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்
சருமத்திற்கு பூசணிக்காய் தரும் நன்மைகள்

சருமத்தில் இயற்கையான பளபளப்பை பராமரிக்க
நமது சருமம் ஆரோக்கியமாக இருக்கும்போது சருமம் வெளிப்புறமும் பளபளக்கும். பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலமும் இதில் உள்ளது, இது சருமத்தை பீல் செய்து, பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?
சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும்

பூசணிக்காயில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை அதிகரிக்கவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களால் ஏற்படும் சரும சேதத்திலிருந்து தோல் மற்றும் கண்களைப் பாதுகாக்க வைட்டமின் ஏ உதவுகிறது. இதனை உட்கொள்வதால், பாதிக்கப்பட்ட சருமம் குணமாகி, முகத்தில் பொலிவு அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?
முகப்பரு பிரச்சனை நீங்கும்
பூசணிக்காயில் உள்ள அத்தியாவசிய பண்புகள் அலர்ஜி மற்றும் முகப்பரு பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. இது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியம் மேம்படும்

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சரியான உணவு மற்றும் சரியான தோல் பராமரிப்பு இரண்டும் அவசியம். இந்நிலையில், பூசணிக்காய் சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை உள்ளே இருந்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், சரும பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : சருமப் பொலிவு அதிகரிக்க வீட்டிலேயே ஸ்கின் பாலிஷிங் செய்வது எப்படி?
சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும்
பூசணிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். இதில், உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் சரும வறட்சியை குறைக்கவும் உதவும். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதுடன், சருமத்திற்கு இயற்கையான பொலிவையும் தருகிறது. எனவே, அன்றாட உணவில் பூசணிக்காயை சேர்த்துக்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும்.
Pic Courtesy: Freepik