$
How To Make Almond Milk Face Mask: நாம் அனைவரும் சருமத்தை பளபளப்பாக வைக்க உபயோகிக்காத பொருட்களே இருக்க முடியாது. ஏனென்றால், நமது முகம் தான் நம்மை பற்றி பல விஷயங்களை மற்றவர்களுக்கு கூறும். ஆனால், சந்தைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி நாம் உபயோகிக்கும் போது, அதில் உள்ள கெமிக்கல்களால் நமது சருமத்திற்கு தீங்கு ஏற்படும். எனவே, சருமத்திற்கு இயற்கையான பொருட்களை உபயோகிப்பது மிகவும் நல்லது.
நாம் ஆரோக்கியத்திற்கு நல்லது என, கூறப்படும் பாதாம் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என உங்களுக்கு தெரியுமா? பாதாம் பாலில் அத்தியாவசிய பண்புகள் காணப்படுகின்றன, இது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். இதை ஃபேஸ் ஸ்க்ரப் அல்லது ஃபேஸ் மாஸ்க் ஆகவும் பயன்படுத்தலாம். இது கரும்புள்ளிகள் மற்றும் மந்தமான சரும பிரச்சனையை நீக்க உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும், பாதாம் பாலை வைத்து ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : இனி காசு கொடுத்து வாங்க தேவையில்லை. உங்கள் முகப்பொலிவிற்கான சிறந்த நைட் கிரீமை வீட்டிலேயே செய்யலாம்
சருமத்திற்கு பாதாம் பாலின் நன்மைகள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி பாதாம் பாலில் காணப்படுகின்றன. இவை, வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது. இது சருமத்தை டான் மற்றும் ஈரப்பதமாக்க உதவும். இதை பயன்படுத்துவதால், கரும்புள்ளிகள் மற்றும் வறண்ட சரும பிரச்சனை நீங்கும்.
பாதாம் பால் மற்றும் முல்தானி மிட்டி
முல்தானி மிட்டி மற்றும் பாதாம் பால் ஃபேஸ் மாஸ்க் சருமத்தை ஹைட்ரேட் செய்து பளபளப்பாக வைத்திருக்க உதவும். இதைப் பயன்படுத்தினால், கரும்புள்ளிகள் மற்றும் பொலிவிழந்த சருமத்தை மீண்டு மீட்டெடுக்கலாம். ஃபேஸ் மாஸ்க் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் முல்தானி மிட்டியை எடுத்துக் கொள்ளவும். பேஸ்ட் தயார் செய்ய, தேவைக்கேற்ப பாதாம் பால் சேர்க்கவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்தில் தடவி, காய்ந்த பிறகு முகத்தைக் கழுவவும்.
இந்த பதிவும் உதவலாம் : குளிர்கால உதடு பராமரிப்பு முறைகள் - உங்கள் உதடுகளை இளஞ்சிவப்பாகவும், மென்மையாகவும் மாற்ற 8 சூப்பர் டிப்ஸ்
பாதாம் பால் மற்றும் கடலை மாவு

கடலை மாவில் இருக்கும் நுண்ணிய துகள்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் கடலை மாவு, அரை தேக்கரண்டி மஞ்சள் மற்றும் பாதாம் பால் கலக்கவும். பேஸ்ட்டை தயார் செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் சுத்தம் செய்யவும்.
பாதாம் பால் மற்றும் சந்தனம்
பாதாம் பால் மற்றும் சந்தன ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். கரும்புள்ளிகள், மந்தமான சருமம் மற்றும் சேதமடைந்த சருமம் போன்ற பிரச்சனைகளை நீக்குவதற்கு இது உதவும். இந்த முகமூடியைத் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் சந்தனப் பொடியை எடுத்துக் கொள்ளவும். அதில், 2 ஸ்பூன் பாதாம் பால், ரோஸ் ஜெல் மற்றும் மஞ்சள் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் 15 நிமிடங்கள் வைத்திருந்து சுத்தம் செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : உங்கள் சருமத்தை இப்படி பராமரித்தால், 30 வயதிற்கு பிறகும் கூட உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்புடனும் இருக்கும்
அலோ வேரா மற்றும் பாதாம் பால்

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 ஸ்பூன் பாதாம் பால் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து முகத்தில் தடவு மசாஜ் செய்யவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை சுத்தம் செய்யவும். இந்த ஃபேஸ் மாஸ்க் அனைத்தும் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நன்மை பயக்கும். பக்கவிளைவுகளைத் தடுக்க, பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
Pic Courtesy: Freepik