How To Use Tulsi for Skin Whitening: ஆண், பெண் இருவரும் முகப்பரு இல்லாத பளபளப்பான சருமத்தையே விரும்புகிறார்கள். சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கத்தால் சரும பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. இதற்காக நாம் சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், அவை உங்கள் முகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சந்தையில் கிடைக்கும் கிரீம்களில் உள்ள கெமிக்கல்கள் சருமத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். சருமத்திற்கு இயற்கை பொருட்களை பயன்படுத்து நல்ல பயன்களை தரும். இவை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. நமது வீடுகளில் பெரும்பாலும் காணப்படும் துளசி முகப்பருவை விரைவாக நீக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? பரு பிரச்சினையில் இருந்து விடுபட துளசியை எப்படி பயன்படுத்துவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Tulsi Skin Benefits: முகப்பரு, கறை இல்லாம முகத்தை பளபளப்பா வைத்திருக்க துளசியை இப்படி பயன்படுத்துங்க
துளசியை சருமத்தில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

துளசி சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே, நீங்கள் அதை முகத்தில் பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனையை நீக்கும். இதனை முகமூடியாகப் பயன்படுத்தினால், சருமத்தில் பருக்கள் பிரச்சனை வராது.
துளசி ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்
துளசி இலைகள் - 10 முதல் 12 வரை.
கடலை மாவு - 1 ஸ்பூன்.
தயிர் - 1/2 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்.
இந்த பதிவும் உதவலாம் : Tulsi Water: தினசரி துளசி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
துளசி ஃபேஸ் பேக் செய்முறை:

- துளசி ஃபேஸ் பேக் செய்ய, முதலில் இலைகளை தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
- அதன் பிறகு, அவற்றை அரைத்து ஒரு பேஸ்ட்டை தயார் செய்யவும்.
- இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- இப்போது அதில் துளசி விழுது சேர்க்கவும். இந்த கலவையை சிறிது நேரம் அப்படியே ஊறவைக்கவும்.
எப்படி பயன்படுத்துவது?
- இதைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள். இதனால் முகத்தில் அழுக்குகள் நீங்கும்.
- இப்போது அதை ஒரு பிரஷ் உதவியுடன் முழு முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.
- சுமார் 15-20 நிமிடங்கள் முகத்தில் உலர விடவும்.
- அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இதை வாரம் ஒருமுறை செய்து பாருங்கள் முகப்பரு பிரச்சனை முற்றிலும் குறையும்.
இந்த பதிவும் உதவலாம் : Tulsi Powder for Skin: சருமத்தைப் பொலிவாக்க உதவும் மந்திரப் பொடி. இப்படி பயன்படுத்திப் பாருங்க
கூடுதல் குறிப்பு:

அலோ வேரா ஜெல்லைக் கொண்டும் துளசி ஃபேஸ் பேக் செய்யலாம். கற்றாழை ஜெல்லுடன் இதைப் பயன்படுத்துவதன் மூலம், தோல் நீரேற்றமாக இருக்கும் மற்றும் முகப்பருக்கள் பிரச்சனை நீங்கும்.
உங்கள் சருமம் மிகவும் எண்ணெய் பசையாக இருந்தால், அதன் காரணமாக உங்கள் சருமத்தில் மீண்டும் மீண்டும் பருக்கள் தோன்ற ஆரம்பித்தால், இதற்கு துளசியுடன் முல்தானி மிட்டியைப் பயன்படுத்தலாம். இதனால் சரும பிரச்சனைகளும் நீங்கும்.
Pic Courtesy: Freepik