இரவில் தண்ணீர் குடிப்பது நல்லதா? இல்லையா என்று சந்தேகமா.. சிலருக்கு பகலை விட இரவில் தாகம் அதிகமாக இருக்கும். இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளுங்கள்…

தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் மற்றும் தீமைகள் உண்டு.நாம் தினமும் பல விஷயங்களை செய்து வருகிறோம். அதற்காக நமது உடலும் தசைகளும் அதிக முயற்சி எடுக்கின்றன. இதன் காரணமாக, உடல் அதிக நீரை இழக்கிறது. இதனால் நம்மில் உள்ள நீர்ச்சத்து குறைகிறது.மேலும் தூக்கமின்மையால் உடல் சோர்வாகவும், அசௌகரியமாகவும் இருக்கும்.
முக்கிய கட்டுரைகள்
இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிப்பது ஒவ்வொருவரின் உடல் வகையைப் பொறுத்தது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிக்கவும், அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். இரவில் காரமான அல்லது மசாலா உணவுகளைக் குறைப்பதன் மூலம், நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியதை தவிர்க்கலாம்.
படுக்கைக்கு செல்லும் முன் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- பொதுவாக நமது உடல் பகலில் தண்ணீரை இழக்கிறது. போதுமான நீரேற்றம் இல்லாததால், இரவில் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். ஆனால் தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதால் நீரேற்றம் சரியாக இருக்கும். இது உங்களின் தூக்க பிரச்சனையையும் தீர்க்கும்.
- பகலில் உடற்பயிற்சி செய்வது மற்றும் பல்வேறு வகையான வேலைகள் உங்கள் தசைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடிப்பது தசைகளுக்கு நன்மை தரும்.
- நாம் தூங்கும் போது, உடலின் வெப்பநிலை இயல்பாகவே குறைகிறது. அதேசமயம் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. இரவில் உடல் வெப்பமடைவதால் தூக்கம் கெடுவதையும் இது தடுக்கிறது.
- டீஹைட்ரேஷன் தொண்டை வறட்சி மற்றும் நாசி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனால் குறட்டை, தூக்கத்தில் லேசான மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படக்கூடும். எனவே அதனை தடுக்க விரும்பினால், இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடிப்பது நல்லது.
- உறங்கச் செல்வதற்கு முன் ஒரு கப் சூடான மூலிகை தேநீர் அல்லது ஒரு கிளாஸ் இளநீர் குடிப்பது உங்கள் உடலில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். இந்த பழக்கம் உங்கள் உடலுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்று சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது உடலை தளர்வாக்கி, தூக்கத்தை தூண்டும்.
இதையும் படிங்க: Diwali 2023: தீபாவளி ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க்ஸ் - விருந்தாளிகளை அசத்துங்க!
படுக்கைக்கு செல்லும் முன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
- படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பதில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று சிறுநீர் கழித்தல். இதற்காக எழுந்திரிப்பதை மருத்துவ மொழியில் நாக்டூரியா என அழைக்கிறார்கள். தூக்கத்தின் இடையே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்குச் செல்வது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
- இரவில் தண்ணீர் குடிக்கும் சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். தூங்கும் போது கிடைமட்டமாக படுத்துக்கொள்வதால், இரைப்பை அமிலம் உணவுக்குழாய்க்குள் மீண்டும் எளிதாகப் பாய்கிறது. இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, அது உங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்கிறது.
- சிலர் நீரேற்றமாக இருக்க இரவில் படுக்கும் முன் நிறைய தண்ணீர் குடிப்பார்கள். இதனால் உடலில் சேரும் அதிகப்படியான திரவங்களைச் செயல்படுத்த உடலின் வெவ்வேறு உறுப்புகள் வேலை செய்ய வேண்டும். என்பதால் தூக்கத்தில் தொந்தரவு ஏற்படுகிறது.
- தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதிகமாக தண்ணீர் குடித்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக தண்ணீர் குடிப்பதால் சுவாசக்குழாய் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, தூக்கத்தின் போது சுவாசிப்பது கடினமாகிவிடும்.
- Image Source: Freepik