Health Benefits of Moringa Seeds: எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டு, முருங்கை விதை சிறந்து திகழ்கிறது. தலை முதல் கால் வரை அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வாக இது உள்ளது. அப்படி என்ன நன்மைகள் இதில் இருக்கிறது என்று இங்கே காண்போம்.
நீரிழிவு மேலாண்மை
முருங்கை விதையில் உள்ள துத்தநாகம், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக திகழ்கிறது.

கண் ஆரோக்கியம்
முருங்கை விதையில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது. மேலும் இது பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.
இரத்த சோகை நீங்கும்
முருங்கை விதையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்த எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் இரத்த சோகை நீங்கும்.
இதையும் படிங்க: Moringa Health Benefits: இது தெரிஞ்சா முருங்கையை சாப்பிடாதவங்க கூட சாப்பிடுவாங்க
மூட்டு வலி குறையும்
முருங்கை விதையில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது. இது எலும்பை வலுவாக்கும். இதனால் மூட்டு வலி ஏற்படாது. மேலும் இது பற்களை வலுவாக்கும்.
இதய ஆரோக்கியம்
முருங்கை விதை சாப்பிடுவதால், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறையும். இதனால் இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதுவும் இதயத்தை காக்க உதவும்.
சருமம் ஜொலிக்கும்
முருங்கை விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து காக்கிறது. இதனால் சருமம் சார்ந்த பிரச்னைகள் நீங்கி, சருமம் ஜொலிக்கும்.
ஆரோக்கியமான சிறுநீரகம்
சிறுநீரகத்தில் நச்சு சேராமல் தடுக்க முருங்கை விதை உதவுகிறது. இதனால் சிறுநீரகத்தில் கல், நீர் குத்தல், சிறுநீர் பாதை தொற்று போன்றவை ஏற்படாது.
ஆஸ்துமாவுக்கு தீர்வு
ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் முருங்கை விதையை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது நுரையீரலை காக்கிறது. மேலும் சுவாப் பிரச்னையை தீர்க்கிறது.
Image Source: Freepik