Weight Loss Drinks: எலுமிச்சை நீர் உடல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் நன்மை பயக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் உடல் எடையை குறைக்க எலுமிச்சை நீரை எப்படி குடிக்க வேண்டும், எத்தனை நாட்கள் குடிக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். குழந்தைகள், பெரியவர்கள் அல்லது முதியவர்கள் என அனைவருமே இப்போதெல்லாம் தங்கள் எடை அதிகரிப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். எடை அதிகரிப்பு, அதாவது உடல் பருமன் பல உடல்நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். பெரும்பாலான நோய்கள் உடல் பருமனால் ஏற்படுகின்றன.
உடல் எடையை குறைக்க பல உணவுகள் உதவியாக இருக்கும், அத்தகைய ஒரு உணவுதான் எலுமிச்சை தண்ணீர். ஆனால் இதை எப்படி உட்கொள்ள வேண்டும் என பார்க்கலாம்.
மேலும் படிக்க: இரவில் சீக்கிரமா தூங்கணுமா? அப்ப படுக்கைக்கு செல்லும் முன் இத ஃபாலோ பண்ணுங்க
உடல் எடை குறைய எத்தனை நாட்கள் எலுமிச்சை நீர் குடிக்க வேண்டும்?
- வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை தொடர்ந்து உட்கொண்ட ஒரு வாரத்திற்குள் செரிமானத்தில் முன்னேற்றம் மற்றும் அதிக ஆற்றல் நிலைகள் போன்ற முடிவுகளைக் காணலாம்.
- எலுமிச்சை நீர் குடிப்பது உங்கள் எடை மேலாண்மை இலக்குகளை அடைய உதவும், இது நீர் உட்கொள்ளலை அதிகரித்து உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
- ஒரு வாரத்தில் எடை இழக்க, நீங்கள் குறைவான பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடலாம், அதிக தண்ணீர் குடிக்கலாம், உடற்பயிற்சி செய்யலாம் மற்றும் உங்கள் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கலாம்.
- இருப்பினும், பொதுவாக படிப்படியாகவும் நிலையானதாகவும் எடையைக் குறைக்கவே பரிந்துரைக்கப்படுகிறது.
- உடல் எடையைக் குறைக்க எலுமிச்சை சாற்றை எப்படி குடிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

எடை இழப்புக்கு எலுமிச்சை தண்ணீர் குடிப்பது எப்படி?
- எலுமிச்சையில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், பெக்டின் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
- இந்த கூறுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
- எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எடை குறைக்க உதவுகின்றன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்தும் பாதுகாக்கிறது.
எலுமிச்சை மற்றும் புதினா கலந்த தண்ணீர்
- நீங்கள் எடை இழக்க விரும்பினால், எலுமிச்சை மற்றும் புதினா தண்ணீரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சை மற்றும் புதினா குறைந்த கலோரி உணவாகும், இது கொழுப்பை எரிக்க உதவுகிறது.
- புதினாவில் நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதாக உணர்கிறது மற்றும் பசியை உணராது.
- எலுமிச்சை மற்றும் புதினா தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு எலுமிச்சையை பிழியவும். அதனுடன் புதினா இலைகளின் சாற்றை சேர்த்து குடிக்கவும்.
- எலுமிச்சை ரூ.5 முதல் கிடைக்கிறது அதேபோல் புதினாவை ரூ.5க்கே வாங்கலாம். இப்படியாக ரூ.10 செலவு செய்தால் போதும்.

எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் தண்ணீர்
- எலுமிச்சை, வெள்ளரிக்காய் தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இந்த நீரைக் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, கொழுப்பு எரிகிறது.
- மேலும், எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
- எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் தண்ணீர் குடிப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும். இது எடை இழப்புக்கு உதவும்.
மேலும் படிக்க: Rapid Weight Lose: தினசரி இந்த நட்ஸ் மற்றும் விதைகளை 2 சாப்பிட்டால் போதும் உடல் எடை சரசரவென குறையும்!
எலுமிச்சை மற்றும் இஞ்சி நீர்
எடை இழக்க விரும்பினால், எலுமிச்சை மற்றும் இஞ்சி தண்ணீர் குடிப்பதும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். எலுமிச்சை மற்றும் இஞ்சி உடலை நச்சு நீக்கி, உடலில் சேரும் அழுக்கு மற்றும் கொழுப்பு எளிதில் அகற்றப்படும். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கலாம். எலுமிச்சை மற்றும் இஞ்சி தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு சேர்த்து குடிக்கவும்.
எடை குறைக்க விரும்பினால், மேலே குறிப்பிட்டுள்ள எலுமிச்சை பானங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் முறையாக மருத்துவர் அல்லது ஆலோசகர் பரிந்துரையின் பேரில் மட்டுமே குடிக்கவும்.
image source: freepik