முடி வெட்ட சலூனுக்கு போறீங்களா? இந்த விஷயத்தை மறக்கவேக் கூடாது!

  • SHARE
  • FOLLOW
முடி வெட்ட சலூனுக்கு போறீங்களா? இந்த விஷயத்தை மறக்கவேக் கூடாது!


முந்தைய நிலையை விட சலூன்கள் இப்போது என்னதான் வளர்ச்சி அடைந்தி இருந்தாலும், முடி திருத்தும் வழிகள் பெரும்பாலான இடங்களில் ஒன்றாக தான் இருக்கிறது. கடையை அலங்காரமாகவும் பல பொருட்கள் நிரம்பியபடி இருக்கும் விதமாகவும் சலூன் கடைக்காரர்கள் கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள். காரணம், இது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்.

முடி வெட்டும் கடைக்கு செல்லும் முன் செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிகள்

சலூன் கடை இப்போது பியூட்டி பார்லர், பார்லர் என பல வகையில் திகழ்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலான முடி திருத்த கடைகளில் அப்பாயின்ட்மென்ட் பெற்ற செல்ல வேண்டியுள்ளது. இப்படி என்னதான் முடி திருத்த கடை வளர்ச்சி அடைந்திருந்தாலும் சில குறிப்பிட்ட விஷயங்களில் நாமும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கத்திரிக்கோல்

முடி திருத்தம் செய்ய என்னதான் ட்ரிம்மர் வந்தாலும் கத்திரிக்கோல் என்பது மிக முக்கியம். பலருக்கும் ஒரே கத்திரிக்கோல் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த கத்திரிக்கோல் ஒருவருக்கு வெட்டப்பட்ட உடன் முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டியது மிக முக்கியம்.

ஷேவிங் பிளேடு

ஷேவிங் செய்ய ட்ரிம்மர் பயன்படுத்தப்பட்டாலும், அதன் பார்டரை சரிசெய்ய பிளேடு பொருத்திய கத்தி தான் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் க்ளின் ஷேவ் செய்யவும் பிளேடு பொருத்திய கத்தி தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கத்தியில் பொருத்தப்படும் பிளேடு மாற்றப்பட்டுள்ளதா என்பதை சோதிப்பது மிக முக்கியம். ஒருவருக்கு ஷேவிங் செய்யும்போது பிளேடு பட்டு இரத்தம் வந்து அதை மற்றொருவருக்கு அப்படியே ஷேவ் செய்தால் அந்த நபருக்கு உள்ள வியாதி நிச்சமாக மற்றவருக்கும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

சலூன் துண்டு

சலூனில் ஷேவிங் செய்தவுடன் தண்ணீர் அப்ளை செய்துவிட்டு துண்டை வைத்து துடைப்பது வழக்கம். ஷேவிங் செய்தவுடன் சருமம் மிருதுவாக இருக்கும். இந்த சமயத்தில் ஒரே துண்டை பலருக்கு பயன்படுத்தும் போது தேமல் போன்ற சரும பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே நீங்களே ஒரு துண்டை எடுத்துச் செல்வது நல்லது அல்லது டிஸ்யூ பேப்பரை பயன்படுத்துவது நல்லது.

தலைமுடி ஹீட்டர்

முடி திருத்தம் செய்த உடன் பெரும்பாலான கடைகளில் ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஹீட்டர் அதிக நேரம் பயன்படுத்தும் பட்சத்தில் முடி கொட்ட அதிக வாய்ப்புள்ளது. எனவே ஹீட்டர் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

ஹேர் டை

அதிக காசு கொடுத்து தலை முடிக்கு டை அடிக்கிறோம். நன்றாக தான் இருக்கும் என எண்ணக்கூடாது. அது என்ன ரக தலைமுடி மை, அதில் எவ்வளவு அமோனியா உள்ளது. இதனால் முடிக்கு ஏதும் ஆபத்து வருமா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அப்ளை செய்யும் தலைமுடி மை ரகத்தை கண்டிப்பாக சரிசெய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உடலில் சரிசெய்யவே முடியாது என சில பிரச்சனைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் நரைமுடி, தலை வழுக்கை உள்ளிட்ட பிரச்சனைகளாகும். எனவே வரும் முன் காப்போம் என்பதை போல் தலைமுடி பிரச்சனையை வரும் முன் காப்பது என்பது மிக முக்கியமாகும்.

image Source: FreePik

Read Next

வேலை செய்யும் போது அடிக்கடி கொட்டாவி விடுகிறதா? அப்போ இதை செய்யுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்