HMPV வைரஸ் என்றால் என்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கொரோனா வைரஸை தொடர்ந்து HMPV என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு சென்னை உட்பட இந்தியாவின் சில இடங்களில் கண்டறியப்பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல், சளி பாதிப்புகளே இதற்கு அறிகுறியாக கூறப்படுகிறது.
  • SHARE
  • FOLLOW
HMPV வைரஸ் என்றால் என்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டும் வரும் நிலையில் தற்போது இந்த வைரஸ் பாதிப்பு என்பது பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. இந்த வைரஸானது ஹியூமன் மெட்டாநியூமோ (எச்எம்பிவி) என அழைக்கப்படுகிறது. சீனாவில் பரவிய இந்த வைரஸானது, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணமே செய்யாத குழந்தைகளுக்கு வந்ததுதான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2001 இல் அடையாளம் காணப்பட்டது, HMPV ஆனது நியூமோவிரிடே குடும்பத்தின் ஒரு பகுதியாகும், இதில் சுவாசம் தொடர்பான வைரஸ் (RSV) அடங்கும், இந்த தகவலானது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் (CDC) குறிப்பிடப்பட்டுள்ளது. வைரஸ் பொதுவாக மேல் மற்றும் கீழ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது, இந்த வைரஸ் அறிகுறியும் ஆரம்பத்தில் சளி அல்லது காய்ச்சலின் மூலமே வெளிப்படுகிறது.

அதிகம் படித்தவை: இது நமக்கு புதிதல்ல., கவலையே வேணாம்: மத்திய அமைச்சர் பதில்

எச்எம்பிவி யாரையும் பாதிக்கலாம் என்றாலும், குறிப்பாக இது சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கே கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என CDC தெரிவித்துள்ளது.

HMPV வைரஸ் எப்படி பரவுகிறது?

HMPV வைரஸ் இருமல் மற்றும் தும்மலின் போது வெளியேற்றப்படும் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுடனான நெருங்கிய தொடர்பு அல்லது அசுத்தமான சூழல் மூலமாகவும் இது எளிதாகவும் வேகமாகவும் பரவலாம்.

hmpv-virus-prevent-tips

HMPV இன் தொற்று காலம் மூன்று முதல் ஐந்து நாட்கள் என்று சீன CDC இணையதளம் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, HMPV ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்டாலும், குளிர்காலம் மற்றும் மழைக்காலங்கள் இது வேகமாக பரவக் கூடியதாக கூறப்படுகிறது.

HMPV வைரஸ் அறிகுறிகள்

மனித மெட்டாப்நியூமோவைரஸ் அடிக்கடி சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, ஆனால் சிலர் தீவிரமாக நோய் வாய்ப்படலாம். இளம் குழந்தைகள் கடுமையான நோய்க்கு ஆளாகிறார்கள், ஏனென்றால் முதல் முறையாக உங்களுக்கு HMPV இருந்தால், நீங்கள் தீவிரமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

லேசான குளிர், தொண்டை நெரிசல் போன்ற அறிகுறிகளும் தென்படலாம். 65 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள், சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் கடுமையான அறிகுறிகளை சந்திக்கலாம். இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தொண்டை வலி, மூச்சுத்திணறல், மற்றும் சொறி ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். HMPV வைரஸானது சில நேரங்களில் மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, ஆஸ்துமா மற்றும் காது தொற்று போன்ற சிரமங்களை ஏற்படுத்தலாம்.

HMPV வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

HMPV மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்க இந்த நடவடிக்கைகளை எடுக்க CDC அறிவுறுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டும். குறைந்தது 20 வினாடிகளுக்கு ஒருமுறை சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவவும்.

இதையும் படிங்க: HMPV and Pregnancy: HMPV தொற்று கர்ப்பத்தை பாதிக்குமா? டாக்டர் கூறுவது இங்கே!

வைரஸ் பரவாமல் தடுக்க உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வீட்டிலேயே இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ணுங்கள். கழுவப்படாத கைகள் மூலம் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும். நெரிசலான பகுதிகளுக்கு செல்லும் போது மாஸ்க் அணயவும்.

pic courtesy: freepik

Read Next

இது நமக்கு புதிதல்ல., கவலையே வேணாம்: மத்திய அமைச்சர் பதில்

Disclaimer

குறிச்சொற்கள்