கொரோனா வைரஸை தொடர்ந்து HMPV என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு சென்னை உட்பட இந்தியாவின் சில இடங்களில் கண்டறியப்பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல், சளி பாதிப்புகளே இதற்கு அறிகுறியாக கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டும் வரும் நிலையில் தற்போது இந்த வைரஸ் பாதிப்பு என்பது பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. இந்த வைரஸானது ஹியூமன் மெட்டாநியூமோ (எச்எம்பிவி) என அழைக்கப்படுகிறது. சீனாவில் பரவிய இந்த வைரஸானது, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணமே செய்யாத குழந்தைகளுக்கு வந்ததுதான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிகம் படித்தவை: HMPV and Pregnancy: HMPV தொற்று கர்ப்பத்தை பாதிக்குமா? டாக்டர் கூறுவது இங்கே!
சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வந்த குழந்தைக்கு பரிசோதனை செய்த போது எச்எம்பிவி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அது முற்றினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படக் கூடும் எனவும் இந்த பாதிப்பு குறிப்பாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் 2001ம் ஆண்டு முதல் HMPV வைரஸ் பரவி வருவதாகவும் பொது மக்களுக்கு இந்த வைரஸால் எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் மத்திய சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா இதுகுறித்து கூறுகையில், சுகாதாரத்துறை நிபுணர்கள் மூலம் HMPV வைரஸ் என்பது புதியது அல்ல என குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2001ம் ஆண்டு முதலே இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக இருக்கிறது. மேலும் இந்த வைரஸானது காற்று மூலமாகவும் சுவாசத்தின் மூலமாகவும் பரவக் கூடியதாகும்.
இதையும் படிங்க: Weight Loss: 3 மாசத்துல அசால்ட்டா 15 கிலோ குறைக்கலாம்.! அதுவும் வெஜ் டையட்..
நாட்டின் சுகாதார அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு வலையமைப்புகள் விழிப்புடன் உள்ளன. எந்தவொரு சுகாதார சவால்களையும் உடனடியாக எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது. கவலைப்பட எந்த தேவையும் இல்லை, நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என குறிப்பிட்டார்.
pic courtesy: freepik