Expert

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மன நலனை பாதிக்குமா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

  • SHARE
  • FOLLOW
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மன நலனை பாதிக்குமா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!


Mental Health: உணவே மருந்து என்ற காலம் மாறி, நாம் உட்கொள்ளும் உணவு வகைகளே புதுப்புது நோய்கள் உருவாக்க காரணமாக மாறி வருகின்றன. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது உடல் பருமன், நீரழிவு நோய், செரிமான கோளாறுகள், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆய்வு ஒன்றின் மூலமாக தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது மனநலனை பாதிக்கும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 

பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மனநலனுக்கு ஆபத்து: 

உலக அளவில் இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் பேரிடம் அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான  சேபியன்ஸ் லேப்ஸ் மெகா ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளது. 

இந்த ஆய்வு முடிவுகளின் படி, “அல்ட்ரா-புரோசஸ் செய்யப்பட்ட உணவுகளை (UPFS) எப்போதாவது உண்பவர்கள் அல்லது ஒருபோதும் உட்கொள்ளாதவர்களின் மன ஆரோக்கியம், அந்த உணவுகளை ஒரு நாளைக்கு பல முறை உட்கொள்பவர்களின் மன ஆரோக்கியத்தை விட 3 மடங்கு நன்றாக உள்ளது” என கண்டறியப்பட்டுள்ளது.  

impact of ultra-processed food on mental wellbeing

இதையும் படிங்க: தினமும் இதைச் செய்தால் இதய நோய் அபாயம் குறையுமா?

சோடா பானங்கள், சிப்ஸ் பாக்கெட், தின்பண்டங்கள், சாக்லெட் மற்றும் பதப்படுத்தப்பட்டு பேக் செய்யப்படும் உணவு வகைகள் மன ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 

சேபியன்ஸ் லேப்ஸ் நிறுவனரும், நரம்பியல் விஞ்ஞானியுமான தாரா தியாகராஜன் கூறுகையில், "தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை வரையறுப்பது எப்படி என்ற சர்ச்சை நீண்ட காலமாக உள்ளது. இதனை எளிதாக விளக்கு வேண்டுமென்றால், உங்களிடம் இல்லாத பொருட்கள் மற்றும் வீட்டு சமையலறையில் நீங்கள் செய்ய முடியாத உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் சேர தகுதியுடையவை ஆகும்” என்கிறார். 

நொறுக்குத்தீனி துறையின் அபார வளர்ச்சி: 

இந்தியாவில் 2011 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கான துறை சுமார் 13.37 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது. 

அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். அடுத்த 10 ஆண்டுகளில் அல்ட்ரா-புரோசஸ் செய்யப்பட்ட உணவுகள் (UPFS) இந்தியாவின் GDP வளர்ச்சி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் நுகர்வு ஆகியவற்றை விட வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

impact of ultra-processed food on mental wellbeing

பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உண்டாகும் பிரச்சனைகள்: 

மனநலத்துடன் மட்டுமின்றி, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற பிற நோய்கள் ஏற்படவும் அல்ட்ரா - புரோசஸ் ஃபுட் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில சமீபத்திய ஆய்வுகள் இந்த உணவு வகைகளுக்கு மனச்சோர்வுடன்  தொடர்பு உள்ளதை கண்டறிந்துள்ளன. 

அதி தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது மனச்சோர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, எண்ணங்கள், உணர்ச்சியை கட்டுப்படுத்துவது போன்றவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

இதையும் படிங்க: Foods For Dengue Fever: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?

ஆண், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? 

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்ளுபவர்கள் 24 வகையான மன செயல்பாடுகளுக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சோகம், துன்பம், நம்பிக்கையின்மை, பசியின்மை, மனச்சோர்வு போன்றவை ஆண், பெண் என இருபாலரையும் கடுமையாக பாதிப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுடன் ஒப்பிடும்போது,18-24 வயதுடைய இளைஞர்கள் தினசரி இத்தகைய உணவை உட்கொள்வது இரு மடங்கு அதிகமாகும் என்பது தெரியவந்துள்ளது. 

இன்றைய இளம் தலைமுறையினர் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும், அல்ட்ரா புரோசஸ் ஃபுட் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கு இடையே உள்ள தொடர்பை கண்டறிவதுமே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் என சேபியன் லேப்ஸ் தெரிவித்துள்ளது. 

Image Sources: Freepik

Read Next

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்