Vitamin E Skin Care: சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஈ பயன்படுத்தும் முறை

  • SHARE
  • FOLLOW
Vitamin E Skin Care: சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஈ பயன்படுத்தும் முறை


Ways To Use Vitamin E For Skin: வைட்டமின் ஈ ஊட்டச்சத்து ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஆகும். இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் முக்கிய ஊட்டச்சத்து ஆகும். உடல் பல்வேறு வகையான செயல்பாடுகளைச் செய்ய வைட்டமின் ஈ உதவுகிறது. அந்த வகையில் சருமத்திற்கு மிகுந்த அளவிலான நன்மைகளைத் தரும் வகையிலேயே வைட்டமின் ஈ உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்கள், நெகிழ்வுத் தன்மை, முதுமைத் தோற்றம் என அனைத்தையும் பராமரிக்க உதவுகிறது. ஆனால் இந்த வைட்டமின் ஈயை எவ்வாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இதில், வைட்டமின் ஈயை சருமத்திற்கு பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.

சருமத்திற்கு வைட்டமின் ஈ பயன்படுத்தும் முறை

இதில் எந்தெந்த வழிகளில் சருமத்திற்கு வைட்டமின் ஈயைப் பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்.

வைட்டமின் ஈ ஆயில்

நம் உடலுக்குத் தேவையான நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஈ உதவுகிறது. இவை நம் உடல் செல்களைப் பாதிக்கக் கூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுத்து நிறுத்துகிறது. கண் பார்வை மேம்பாட்டிற்கும் வைட்டமின் ஈ உதவுகிறது. இவை சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின் ஈ ஆயிலைப் பயன்படுத்தலாம். இவை சருமத்தில் எண்ணெய் வடிவதைத் தடுத்து சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Straightening Effects: அடிக்கடி முடி ஸ்ட்ரெய்ட்னிங் செய்பவர்களா நீங்கள்? இத தெரிஞ்சிக்கோங்க

ஃபேஸ் மாஸ்க்

வைட்டமின் ஈயை முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம். சருமத்தில் வைட்டமின் ஈ பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தரும். எனவே, ஃபேஸ் மாஸ்கில் வைட்டமின் ஈ ஆயிலைக் கலந்து பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவது முதுமைத் தோற்றத்தை எதிர்க்க உதவுகின்றன. மேலும், சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள், முகப்பருக்கள் உள்ளிட்டவற்றில் இருந்து விடுபடலாம்.

சரும சீரம்

வைட்டமின் ஈயை சீரமாகப் பயன்படுத்துவது சருமத்தை மெருகேற்ற உதவுகிறது. வைட்டமின் ஈ ஆயிலை சீரமில் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் உள்ள முகப்பருக்களைக் குறைக்கலாம். மேலும், இவை முதுமைத் தோற்றத்தைக் குறைக்கவும், சரும நிறத்திட்டுகளைக் குறைக்கவும் உதவுகின்றன. முகத்திற்கு டோனர் பயன்படுத்திய பின், விரல்களின் நுனியில் 4 முதல் 5 சொட்டு வைட்டமின் ஈ எடுத்து, மற்ற சீரம்களைப் போல முகத்தில் தடவிக் கொள்ளலாம். பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இரவு நேரம் கூட வைட்டமின் ஈ சீரத்தைப் பயன்படுத்துவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Rice Water For Hair: முடி நீளமாகவும், கருமையாகவும் வளர அரிசி நீரை இப்படி பயன்படுத்துங்க.

மாய்ஸ்சரைசர்

மாய்ஸ்சரைசரில் வைட்டமின் ஈ ஆயிலைச் சேர்ப்பது முகத்திற்கு பிரகாசத்தைத் தரும். இது சருமம் சீராக இருப்பதற்கு உதவும். சருமம் பளபளப்பாக மாய்ஸ்சரைசரில் 3 முதல் 4 சொட்டுகள் வைட்டமின் ஈ சேர்க்கலாம்.

வைட்டமின் ஈ அடங்கிய உணவுகள்

இந்த முறைகளுடன், வைட்டமின் ஈ அடங்கிய உணவுகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் சரும பராமரிப்பை மேம்படுத்தலாம். அதன் படி, கீரை, முள்ளங்கி, பச்சை இலை காய்கறிகள், கடல் உணவுகள், அவகேடோ பழம், நட்ஸ் வகைகள் உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஈயைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin E for Hair : அடர்த்தியான கூந்தலை பெற வைட்டமின் E கேப்ஸ்யூலை இப்படி யூஸ் பண்ணுங்க!

Image Source: Freepik

Read Next

Betel Leaf Benefits: தோல் பராமரிப்புக்கு வெற்றிலை இவ்வளவு நல்லதா?

Disclaimer