Ghee Benefits To Relieve Joint Pain: காலம் காலமாக பெரியவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று மூட்டு வலி. இது 2 நபர்களில் ஒருவருக்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் அடிக்கடி ஏற்படுவது ஏன் என்று நம்மில் பலருக்கும் யோசனை தோன்றும். ஆயுர்வேதத்தின் படி, “உடலில் உள்ள வாத தோஷத்தின் ஏற்றத்தாழ்வு உடல் திரவங்களின் இயக்கத்தையும் பல உடல் செயல்முறைகளையும் பாதிக்கிறது. இதனால், மூட்டுகளில் வறட்சி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. இது மூட்டுகளில் அசௌகரியத்தையும் வலியையும் உணர வைக்கிறது".
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் இது ஒரு தீவிர உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்நிலையில், மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் வறட்சியைப் போக்க மக்கள் செய்யாத வைத்தியங்க இருக்க முடியாது. ஆயுர்வேதத்தின்படி, "உடலில் உள்ள வாத தோஷத்தை சமன் செய்தால், உங்கள் பிரச்சனையை பெரிய அளவில் தீர்க்க முடியும்". உடனே வாத தோஷத்தின் சமநிலையை பராமரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும்?
இந்த பதிவும் உதவலாம் : Kashmiri Saffron Benefits: காஷ்மீர் குங்குமப்பூவின் மகத்தான நன்மைகள்!
உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ராவின் கூற்றுப்படி, “A2 சுத்தமான பசுவின் நெய்யை நீங்கள் தொடர்ந்து உட்கொண்டால், அது வளர்ச்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்த உங்களுக்கு உதவும். மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற இது பல வழிகளில் உங்களுக்கு உதவும்". இதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பசு நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

பசு நெய் இயற்கையாகவே மென்மையானது. உடலில் வாத தோஷத்தால் மூட்டுகளில் வறட்சி மற்றும் கடினத்தன்மையை குறைக்க உதவுகிறது. இது மூட்டுகளில் மென்மையை ஏற்படுத்தும். கூடுதலாக, இது நமது மூட்டுகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்குகிறது, இது மூட்டுகளின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. பசு நெய்யில் பியூட்ரிக் அமிலம் உள்ளது, இது ஒரு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலமாகும். கூடுதலாக, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இந்த வழியில், நெய் வீக்கத்தைக் குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற நெய்யை எப்படி சாப்பிடுவது?

டயட்டீஷியன் மன்பிரீத்தின் கூற்றுப்படி, "மூட்டு வலியைப் போக்க, காலையில் வெறும் வயிற்றில் தேசி நெய்யை உட்கொள்ளுங்கள். நெய் வெந்நீருடன் உங்கள் நாளைத் தொடங்கலாம். இதற்கு ஒரு கப் சூடான தண்ணீரில் 1 ஸ்பூன் தேசி பசு நெய்யை சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், மூட்டு வலியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறத் தொடங்குவீர்கள்.
Pic Courtesy: Freepik