$
Use Aloe Vera And Vitamin E For Face: ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சருமத்தைப் பெற வேண்டும் என்பது அனைவருக்கும் சவாலான ஒன்றாகும். இதற்காக பலரும் கடுமையான இரசாயனங்கள் கலந்த தோல் பராமரிப்புப் பொருள்களை உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துபவையாக அமைகின்றன. அதே சமயம் இவை நீண்ட கால பயனுள்ளவையாகவும் அமைவதில்லை. இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக இயற்கையான பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். அதன்படி இயற்கைப் பொருளான கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தை வழங்குகிறது.
கற்றாழையுடன் வைட்டமின் ஈ
கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ இரண்டுமே மருத்துவ நோக்கங்களைக் கொண்ட தாவரமாகும். இவை தெளிவான ஜெல் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள், மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளதாகும். வைட்டமின் ஈ ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகிறது. வைட்டமின் ஈ கொண்ட கற்றாழை ஜெல் ஆனது இயற்கையான தயாரிப்பு ஆகும் இவை சருமத்தைப் பாதுகாப்பதுடன், சருமப் பிரச்சனைகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!
முகத்திற்கு வைட்டமின் ஈ உடன் கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்துவது?
வைட்டமின் ஈ உடனான கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
ஃபேஸ் மாஸ்க்
கற்றாழை ஜெல்லை தேன் மற்றும் வைட்டமின் ஈ கலந்து, ஃபேஸ் மாஸ்க்காக மாற்றி முகத்தில் தடவலாம். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கண் கிரீம்
கண்களில் ஏற்படும் கருவளையங்கள் மற்றும் வீக்கத்தினைக் குறைக்க கற்ராழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். இதற்கு கண் கிரீமாக பயன்படுத்தலாம்.

வெயிலுக்கு நிவாரணமாக
கற்றாழை ஜெல் ஆனது வெயிலுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். வெயிலால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க வைட்டமின் ஈ உடன் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது.
மாய்ஸ்சரைசர்
தினசரி மாய்ஸ்சரைசராக வைட்டமின் ஈ உடன் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
சருமத்திற்கு கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ நன்மைகள்
வைட்டமின் ஈ மற்றும் கற்றாழையைச் சேர்த்து பயன்படுத்துவது சருமத்திற்கு ஆரோக்கியமான நன்மைகளைத் தருகிறது.
தோல் எரிச்சலை நீக்க
கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, சொறி உள்ளிட்டவற்றை நீக்க உதவுகிறது. இவை உணர்திறன் மிகுந்த சருமத்திற்கு ஏற்றவாறு அமைகின்றன.
முகப்பருவை எதிர்த்துப் போராட
இவற்றில் உள்ள சாலிசிலிக் அமிலம் முகப்பருக்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் இவை சருமத் துளைகளை நீக்கி வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எதிர்காலத்தில் வெடிப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது.
தோல் அமைப்பு மேம்பாடு
கற்றாழை ஜெல்லை சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தருவதுடன், சரும அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் ஈ இரண்டையும் சருமத்திற்குப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் இறந்த சரும செல்களை அகற்றி பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை உருவாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!
சருமத்தை ஈரப்பதமாக்க
கற்றாழை, வைட்டமின் ஈ இரண்டும் நீரேற்றமிக்கதாகும். எனவே இவை சிறந்த மற்றும் இயற்கை மாய்ஸ்சரைசராகப் பயன்படுகிறது. இவை இயற்கையாகவே நீண்ட கால நீரேற்றத்தை வழங்குகிறது. குறிப்பாக, வறண்ட மற்றும் உணர்திறன் மிகுந்த சருமத்திற்கு கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ சிறந்த தேர்வாகும்.

முகச்சுருக்கங்களைத் தவிர்க்க
வைட்டமின் ஈ கொண்ட கற்றாழையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை முகத்தில் உள்ள நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் தோல் உறுதியை மேம்படுத்தக்கூடிய என்சைம்கள் உள்ளன.
வைட்டமின் ஈ உடன் கற்றாழையைப் பயன்படுத்துவது சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மேலும், இவை அனைத்துத் தோல் வகைகளுக்கும் ஏற்றக்கூடியதாகும். இவை முதுமையைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இது போன்ற ஏராளமான நன்மைகளைக் கொண்ட வைட்டமின் ஈ உடனான கற்றாழைப் பயன்படுத்தி இயற்கையான சரும பராமரிப்பைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!
Image Source: Freepik