
$
Benefits Of Amla Juice For Skin: பல்வேறு வகையான இயற்கைத் தாவரங்கள் உடல் நல ஆரோக்கியத்திற்கும், சரும பராமரிப்பிற்கும் உதவுகின்றன. அந்த வகையில், புளிப்பு, கசப்பு மற்றும் இனிப்பு என வெவ்வேறு சுவைகளைக் கொண்டு நெல்லிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. நீரிழிவு நோய் முதல் செரிமானம் வரை அனைத்து வகை பிரச்சனைகளுக்கும் உதவக்கூடியதாக நெல்லிக்காய் உள்ளது. மேலும் இவை சருமத்திற்கு பல்வேறு விதமான நன்மைகளைத் தருகிறது. தோல் பராமரிப்பில் ஆம்லா எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பது குறித்து இப்போது காண்போம்.
முக்கியமான குறிப்புகள்:-
சருமத்திற்கு ஆம்லா நன்மைகள்
ஆயுர்வேத உலகில் ஆம்லா ஒரு சூப்பர்ஃபுட் என்றே கூறப்படுகிறது. இதில் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே, சருமத்திற்கு நெல்லிக்காய் ஒரு மகத்தான மூலமாகும். பெரும்பாலும், தோல் பராமரிப்புப் பொருள்களின் தயாரிப்பில் நெல்லிக்காய் இடம்பெற்றிருக்கும். நெல்லிக்காய் பொடி, சாறு உள்ளிட்ட மூலங்கள் சருமத்திற்கு பெரிதும் நன்மை தருகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!
சருமத்திற்கு நெல்லிக்காய் சாறு எவ்வாறு உதவுகிறது
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் சருமத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இப்போது சருமத்திற்கு நெல்லிக்காய் சாறு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
சருமத்தை ஈரப்பதமாக்க
ஆம்லா சாறுகள் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகின்றன. இவை சருமத்தின் அடுக்குகளை புதுப்பித்து இழந்த ஈரப்பதத்தை தருகிறது.
ஆரோக்கியமான சருமத்திற்கு
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது. இது ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்க உதவுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை சமன் செய்து புதிய செல்களின் வருவாயை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான சருமத்தை ஊக்குவிக்கிறது.
சருமத்துளைகளின் சுத்தப்படுத்தி
ஆம்லா தோலின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் போது ஒரு லேசான எக்ஸ்ஃபோலியன்டாக செயல்படுகிறது. அதாவது, வைட்டமின் சி ம்ற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இணைந்து சருமத்தை இறுக்கமாக்கி துளைகளைச் சுத்தப்படுத்துகிறது. இவை சருமத்தில் இறந்த மற்றும் அசுத்த செல்களை அகற்ற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!
முகப்பரு மற்றும் வடுக்கள் நீங்க
நெல்லிக்காய் ஆனது இயற்கை இரத்த சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது. இவை சருமத்தின் திறனை விரைவுபடுத்தி முகப்பருக்களால் ஏற்படும் வீக்கம் அல்லது வடுக்களைக் குறைக்க உதவுகிறது.
வயதானதை எதிர்த்துப் போராட
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே வயது எதிர்ப்புப் போராளிகளாகச் செயல்படுகிறது. மேலும் நெல்லிக்காயில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதில் அமினோ அமிலங்கள் அல்லது ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகின்றன. இவை தோலின் சுருக்கத்தைக் குறைத்து இளமைத் தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.
சருமத்தை பாதுகாக்க
ஆம்லாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கொலாஜனை ஊக்குவிக்கிறது. மேலும் இவை சுற்றுச்சூழல் காரணிகளான புற ஊதாக்கதிர்கள், காற்று மாசுபாடு, அழுக்கு போன்றவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
மேலே கூறப்பட்ட வகைகளில் ஆம்லா சாறு சருமப் பராமரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version