Migraine Headache: மைக்ரேன் தலைவலிக்கு குட்பை சொல்லுங்க… வீட்டு வைத்தியங்கள் இதோ!

  • SHARE
  • FOLLOW
Migraine Headache: மைக்ரேன் தலைவலிக்கு குட்பை சொல்லுங்க… வீட்டு வைத்தியங்கள் இதோ!

“தலைவலி தாங்க முடியலையே”… “தலையே வெடிக்கிற மாதிரி வலிக்குதே…ஒரு வேலையும் பார்க்க முடியல” என பலரையும் படுத்தி எடுப்பதில் மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலிக்கு பெரும் பங்குண்டு. குறிப்பாக குளிர் காலம் வந்துவிட்டாலே தலைவலி நொந்தரவு அடிக்கடி வந்துவிடும். இதற்கு காரணம் சளியின் தாக்கம், இதனால் மைக்ரேன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஏனெனில் சுற்றுச்சூழலில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுவாச நோய்கள் தவிர, ஒற்றைத் தலைவலி, சைனசிடிஸ் பிரச்சனைகள் குளிர்காலத்தில் ஏற்படும். வெப்பநிலை குறையும் போது பலருக்கு ஒற்றைத் தலைவலி தாக்குகிறது. குளிர்காலத்தில் வயதைப் பொருட்படுத்தாமல் இது ஒரு தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சனையாகும்.

தலைவலி மிகவும் பொதுவான பிரச்சனை. இதற்குப் பின்னால் மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை எனப் பல காரணங்கள் இருக்கலாம். இதிலிருந்து நிவாரணம் பெற பலர் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அடிக்கடி தலைவலி வருவது ஒற்றைத் தலைவலியின் (Migraine) அறிகுறியாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளிர்காலத்தில் மைக்ரேன் தலைவலி வெப்பநிலை, வானிலை, கடுமையான, குளிர் காற்று ஆகியவற்றின் மாற்றங்களால் ஏற்படுகிறது. வெப்பநிலையில் ஏற்படும் திடீர் குளிர்ச்சியானது சைனஸ் அல்லது காது வலி, ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். ஏற்கனவே ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த பிரச்சனையை மிகவும் கடுமையாக சந்திக்க நேரிடும். இப்போது குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைப் பார்ப்போம்.

ஒற்றைத் தலைவலியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான வழிகள்:

  • உங்கள் தலையை தொப்பி அல்லது ஸ்கார்ப் கொண்டு மூடவும். அதனால் குளிர் காற்று உங்களை நேரடியாக தாக்காது. இதனால் சளி பிடிக்காமல் இருக்கும்.
  • உச்சந்தலையில் ஆயில் மசாஜ் செய்வதன் மூலமாக ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
  • மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டு ஓய்வெடுக்கவும்.
  • சூடான எண்ணெயால் தலையை மசாஜ் செய்வது வலியைக் குறைக்கும்.
  • நேரத்திற்கு தூங்குங்கள். 8 முதல் 9 மணி நேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.

ஒற்றைத் தலைவலிக்கான வீட்டு வைத்தியம்:

  • 10-15 திராட்சையை ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • ஒரு கிளாஸ் தண்ணீர் (300 மில்லி), 3-4 ஏலக்காய், 1 டீஸ்பூன் சீரகம், 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள், 5 புதினா இலைகள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து மைக்ரேன் தலைவலி அறிகுறிகள் தோன்றும் போதெல்லாம் குடிக்கவும்.
  • பசுவின் நெய்யை உருக்கி இரண்டு அல்லது மூன்று சொட்டு மூக்கில் விடுவது மிகவும் நல்லது என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். அதனால் ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Image Source: Freepik

Read Next

காலில் அதிக நேரம் சாக்ஸ் அணிபவரா நீங்கள்? உஷார்!

Disclaimer

குறிச்சொற்கள்