Reversing Diabetes: சர்க்கரை நோயை மருந்தில்லாமல் நிர்வகிக்க இத ஃபாலோப் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Reversing Diabetes: சர்க்கரை நோயை மருந்தில்லாமல் நிர்வகிக்க இத ஃபாலோப் பண்ணுங்க


Ways To Reverse Diabetes: பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் ஏற்பட்டாலும், இதை முழுமையாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை இல்லை என்பதே பலரின் கருத்து. ஆனால் சில அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும். அவ்வாறெனில், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பது குறித்து காணலாம்.

நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியுமா?

டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சை இல்லை எனினும், இதை மாற்றுவது சாத்தியம் என ஆய்வுகள் காட்டுகிறது. இது ஒரு தொடர் நோயாகும்.

இந்த நோய்க்கு மருந்துகள் எடுக்காத நிலையிலும், இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க முடியும். எனினும், அலட்சியமான நிலையில் உள்ள போது அறிகுறிகள் திரும்ப வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ரிவர்ஸ் டயாபடீஸ்

இது நிரந்தரமான வாழ்நாள் நோயாகும். இந்நிலையில் நீரிழிவு நோய் மாற்றியமைக்கப்படாது. இதனால், நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகி விட்டது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அதே சமயம், நீரிழிவு நோயை நிர்வகிக்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சரியான அளவில் இருப்பின், நீரிழிவு மருந்துகள் தேவைப்படாது. இந்த நிலையே Reverse Diabetes என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் உடற்பயிற்சி உடல் எடை இழப்பு, மற்றும் கலோரி உணவுகள் மூன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Foot Symptoms: நீங்கள் கவனிக்க வேண்டிய நீரிழிவு பாத நோய் அறிகுறிகள்

உடற்பயிற்சி

நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் முக்கியமானதாக உடற்பயிற்சி கருதப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம், போதுமான எடை குறைப்பு கடினமாக இருக்கலாம். ஆனால், உடற்பயிற்சியுடன், குறைந்த அளவிலான கலோரிகளை உட்கொள்வது சிறந்த நன்மைகளைத் தரக்கூடியதாக அமைகிறது.

இவ்வாறு சரியான முறையில் தினசரி உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரையை சரியான அளவில் வைக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில், ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது மற்றும் வாரத்துக்கு சரியான அளவில் மிதமான உடற்பயிற்சி செய்வது மருந்து இல்லாமல் இரத்த சர்க்கரையை அளவாக வைக்க உதவுகிறது.

உடல் எடை இழப்பு

நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் வலுவான சான்றாக உடல் எடை இழப்பும் கருதப்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் முக்கியமாக உடல் எடை இழப்பு கருதப்படுகிறது. உடல் எடை இழப்பின் மூலம் இந்த வகை நீரிழிவு நோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.

உடல் பருமன் கொண்டவர்கள் நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால், முடிந்தவரை விரைவாக உடல் எடையைக் குறைப்பது பயனுள்ளதாக அமையும். கணிசமான அளவு எடை குறைப்பு நீரிழிவு நோய்க்கு நிவாரணம் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Berberine In Diabetes: இரத்த சர்க்கரையை நிர்வகிக்க பெர்பெரின் உதவுவது எப்படி?

குறைந்த கலோரி உணவுகள்

ஆய்வு ஒன்றில் நீரிழிவு நோயில் குறைந்த அளவு கலோரி உணவு எடுத்துக் கொள்வதன் விளைவுகள் குறித்து கூறப்பட்டது. இதில், குறைந்த அளவு கலோரிகளை எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைப்பதுடன் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதனுடன் திரவங்களை உட்கொள்வது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவும். இதில், குறைந்தது 6 மாதம் முதல் 1 வருடம் வரை, இரத்த குளுக்கோஸ் அளவை சாதாரண வரம்புக்கு அருகில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Reversing Diabetes உறுதி செய்வது எப்போது

நீரிழிவு நோய் கொண்ட அனைவராலும் அதிலிருந்து விடுபட முடியாது. ஆனால், மேலே கூறப்பட்ட முறைகளான உடற்பயிற்சி, எடை இழப்பு, உணவு முறை போன்றவற்றை மேற்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

மேலும், நீரிழிவு நோய் உள்ளவர்கள் நீரிழிவு பயிற்சியாளர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர், பிசியோதெரபிஸ்ட் போன்ற நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, Reversing Diabetes நிலையைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hyperglycemia Symptoms: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

Image Source: Freepik

Read Next

சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தலைசுற்றல் வருவதற்கு காரணம் என்ன?

Disclaimer

குறிச்சொற்கள்