Child Sugar Cravings: உங்க குழந்தைங்க அதிகம் சுகர் சாப்பிடுகிறார்களா? எப்படி கட்டுப்படுத்துவது

குழந்தைகள் என்றாலே அதிகளவு இனிப்புகளையே விரும்பி உண்ணுகின்றனர். ஆனால், இது எந்த அளவுக்குக் கெடுதல் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குழந்தைகள் அதிக இனிப்புகளை உட்கொள்வது அவர்களின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் குழந்தைகள் இனிப்பு உட்கொள்வதைத் தவிர்க்க உதவும் வழிகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Child Sugar Cravings: உங்க குழந்தைங்க அதிகம் சுகர் சாப்பிடுகிறார்களா? எப்படி கட்டுப்படுத்துவது

How to stop sugar cravings for kids: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு உணவுகள், சர்க்கரை பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் சர்க்கரை உணவுகளின் காரணமாக பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாக்லேட், பானங்கள் போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்வதால் உடல் பருமன், இதய பாதிப்பு மற்றும் சிறு வயதிலேயே சர்க்கரை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, மாரடைப்பு, வகை 2 நீரிழிவு நோய், கல்லீரல் பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரசனைகளுக்கு சர்க்கரை உட்கொள்வதே காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் நோய்களைத் தடுப்பதற்கும் சர்க்கரையைக் குறைப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய வழிமுறைகளின் உதவியுடன் உணவில் சர்க்கரையைக் குறைக்கலாம். இதில், குழந்தைகளுக்கு உணவில் சர்க்கரை சேர்ப்பதைக் குறைக்க என்னென்ன நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் எடுக்க வேண்டும் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகளே! இனிப்பை பார்த்தாலே ஆசையைக் கட்டுப்படுத்த முடியலையா? - இத ட்ரை பண்ணுங்க!

குழந்தைகள் சர்க்கரை சாப்பிடுவதைக் குறைப்பதற்கான வழிகள்

அதிக பழங்கள், காய்கறிகளைச் சேர்ப்பது

பெரும்பாலான குழந்தைகள் ஆப்பிள், கேரட், ப்ரோக்கோலி, வாழைப்பழங்கள் போன்ற பழங்கள், காய்கறிகளை உள்ளடக்கிய போதுமான புதிய தயாரிப்புகளை சாப்பிடுவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு சர்க்கரை மீதான நாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே, குழந்தைகளுக்கு, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த முழு பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது குழந்தைகள் முழுமையாக உணர வைக்கவும், மனநிறைவின் ஒரு முக்கிய பகுதியாகவும் விளங்குவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனவே உணவு மற்றும் சிற்றுண்டிகளில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பதன் மூலம் குழந்தைகள் சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தலாம்.

சர்க்கரை மாற்று சிற்றுண்டி

எளிய மாற்றங்கள் மற்றும் உணவு சேர்க்கைகளின் உதவியுடன் குழந்தையின் உணவுகளை சர்க்கரையில்லாத, ஊட்டச்சத்து ஆற்றல் மையங்களாக மாற்றலாம். அதிலும் அதன் சுவையை இழக்காமல் செய்யலாம். புரதங்கள் நிறைந்த வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் செலரி அல்லது சீஸ், ஆப்பிள் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பது இனிமையான திருப்தியை அளிக்கிறது. மேலும், ஜெல்லிக்குப் பதிலாக நொறுக்கப்பட்ட வாழைப்பழம் அல்லது நட்ஸ் வெண்ணெயை டோஸ்டில் வைப்பது போன்றவற்றைப் பின்பற்றலாம். இது சர்க்கரை சார்ந்த சிற்றுண்டியாக சிறந்த மாற்றாக அமைகிறது.

சர்க்கரை பானங்களைக் கட்டுப்படுத்துவது

குழந்தைகள் பெரும்பாலும் சோடாக்கள், விளையாட்டு பானங்கள், எலுமிச்சைப்பழம், எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதைத் தவிர்த்து, குழந்தைகளுக்கு பெரும்பாலும் தண்ணீர் அல்லது குறைந்த கொழுப்பு நிறைந்த பால் போன்ற ஆரோக்கியமான உணவுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் ஆப்பிள் பழச்சாறு குடிப்பதற்கு பதிலாக ஆப்பிள் போன்ற முழு பழங்கள் எடுத்துக் கொள்வதை பழக்கப்படுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் குழந்தை இதை கேட்டு அடம்பிடிக்குதா? - ஆர்வத்தை குறைக்க ஊட்டச்சத்து நிபுணர் தரும் அட்வைஸ்!

வீட்டில் சமைத்த உணவு உட்கொள்ளல்

சிலர், வீடுகளில் சமைக்கும் உணவை விட, வெளியில் விற்பனை செய்யும் உணவுகளுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், நாம் எவ்வளவு அதிகமாக நாம் உண்ணுகிறோமோ, அந்த அளவுக்கு அதன் அபாயமும் அதிகரிக்கும். பெரும்பாலும் உணவகங்களில் உள்ள உணவுகளின் சுவையை அதிகரிக்க சர்க்கரை மற்றும் வேறு சில பொருள்களைச் சேர்க்கின்றன. ஆனால், இந்த உணவுகள் காலப்போக்கில் உடல் அபாயத்தை ஏற்படுத்தலாம். எனவே வீட்டில் சமைத்த, ஆரோக்கியமற்ற சேர்க்கைகள் இல்லாத உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது போண்ற ஆரோக்கியமான வழிகளில் குழந்தைகளின் அன்றாட உணவில் சர்க்கரை சேர்க்கையைத் தடுக்கலாம். மேலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sugar Cravings: தண்ணீர் குடிப்பது உண்மையில் இனிப்பு சாப்பிடும் ஆசையை குறைக்குமா?

Image Source: Freepik

Read Next

உங்க குழந்தையோட மூளை அபாரமா வளரனுமா?... அப்போ இத ட்ரை பண்ணுங்க!

Disclaimer