Doctor Verified

Mood Swings Management: குளிர்கால மூட் ஸ்விங் அதிகமா இருக்கா? எப்படி சமாளிப்பது?

  • SHARE
  • FOLLOW
Mood Swings Management: குளிர்கால மூட் ஸ்விங் அதிகமா இருக்கா? எப்படி சமாளிப்பது?


Ways To Manage Mood Swings During Winter: குளிர்காலத்தில் பலரும் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக கடுமையான மனநிலை மாற்றங்களும் அமையும். இதற்கு முக்கிய காரணமாக அமைவது வானிலை மாற்றம் ஆகும். இந்த சூழ்நிலையில், உடல் செயல்பாடு கணிசமாகக் குறைவதுடன், குளிர்காலத்தில் மிகவும் சோர்வாக உணர்கிறோம்.

வானிலை மாற்றங்களால் மனநிலை மாற்றங்களும் அதிகளவில் உண்டாகும். இந்த சூழ்நிலையில், சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சில சமயங்களில் காரணமின்றி வருத்தமாகவும் உணர்வோம். இந்த சிக்கலைத் தவிர்க்க, சர் கங்காராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவ உளவியலாளர் டாக்டர் ஆர்த்தி ஆனந்த் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Illness Symptoms: இந்த அறிகுறிகளை சாதாரணமா நினைக்காதீங்க. இதெல்லாம் இருந்தா மனநோய் இருக்குனு அர்த்தமாம்

குளிர்கால மனநிலை மாற்றத்தை தவிர்ப்பது எப்படி?

உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி

குளிர்காலத்தில் உடல் மிகவும் மந்தமாகக் காணப்படும். இந்த சூழ்நிலையிலேயே நாம் எந்த காரணமுமின்றி அடிக்கடி பதட்டமாகவும், அமைதியற்றதாகவும் உணர்வோம். இந்த சமயத்தில் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு சிறிது நேரம் நடைபயிற்சி செய்யலாம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.

பிடித்த செயல்களில் கவனம் செலுத்துதல்

குளிர்காலத்தில் நாட்கள் குறைவாக இருப்பதால், பல சமயங்களில் நமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும் இந்த காலகட்டத்தில் மனது ஓய்வெடுக்கவும் நேரம் கிடையாது. இந்நிலையிலேயே எந்த காரணமும் இல்லாமல் எரிச்சல் அடைவதை உணர்வோம். குளிர்காலத்தில் இவ்வாறு அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்த பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம். இதன் மூலம் நம் மனதளவில் மற்றும் உடலளவில் சுறுசுறுப்பாகவும், நிம்மதியாகவும் இருப்பதை உணரலாம்.

எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது

மனநிலை மாற்றத்தால் நமக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது ஆகும். இவ்வாறு தோன்றும் போது, காரணம் ஏதும் இல்லாமல் கவலை அல்லது வருத்தத்தை உணர்கிறோம். இதனால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இந்த சூழ்நிலையில் நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்துவது, எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி நிற்க வைக்கும். எதிர்மறையான சிந்தனைகளைத் தவிர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Mustard Oil Foot Massage: கடுகு எண்ணெய் மசாஜ்ல இவ்ளோ நன்மைகள் இருக்கா? எப்போ, எப்படி தடவணும் தெரியுமா?

போதுமான தூக்கம் அவசியம்

சில சமயங்களில் போதுமான தூக்கம் பெறாமல் இருப்பதன் காரணமாகவும், எரிச்சல், கோபம் போன்றவை ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் நமது உடல் மற்றும் மூளை சுறுசுறுப்பாக இயங்காது. இதனால், நம் மனநிலை மீண்டும் மீண்டும் மாறிக்கொண்டே இருக்கலாம். எனவே முழுமையான தூக்கம் பெறுவது அவசியமாகிறது.

பயணத்தைத் திட்டமிடுவது

மனநிலை மாற்றங்களால், மனம் அமைதியற்று காணப்படும். இந்த சூழ்நிலையில் மனதை அமைதிப்படுத்த பிஸியான வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். இந்த ஆரோக்கியமான இடைவேளை மனரீதியாக ஓய்வெடுக்க உதவும்.

இந்த முறைகளின் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்களை எளிதில் சமாளிக்கலாம். ஆனால், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பின், உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் நேரத்தை செலவிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Early Wakeup Benefits: அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

எச்சரிக்கை... ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துபவரா நீங்கள்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்