$
How To Improve Digestion: நாம் உண்ணும் உணவின் மூலம் நமது உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. அத்தகைய உணவு ஜீரணமாகவில்லை என்றால் ஆற்றல் கிடைக்காது. மேலும், பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால்தான் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன? அதனை கட்டுப்படுத்துவதற்கான எளிய வழிகள் என்னென்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

செரிமான பிரச்சனைகள் ஏன் ஏற்படுகின்றன?
நம் உடலில் பல நுண்ணுயிரிகள் உள்ளன. சில நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டியதை விட குறைவாக இருந்தால், எடுத்த உணவை ஜீரணிப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால்தான் நமது உடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் சரியான எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நுண்ணுயிர்கள் குறைவதற்கான காரணங்கள்
நம் உடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைவதற்கு நாம் உண்ணும் உணவின் காரணமாக இருக்கலாம். மேலும் இதற்கு தூக்கம், மன அழுத்தம் என பல காரணங்கள் இருக்கலாம். அதிக சர்க்கரை உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம். இதன் காரணமாக, இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. இதன் விளைவாக, செரிமான பிரச்னைகள் எழுகின்றன. நீங்கள் சிவப்பு இறைச்சி சாப்பிட்டால் இதேதான் நடக்கும்.
இதையும் படிங்க: உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்
நார்ச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
உடலுக்கு தேவையான அளவு நார்ச்சத்து கிடைத்தால், நுண்ணுயிரிகளின் விஷயத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. அதனால்தான் ஆரோக்கியமான நார்ச்சத்து கொண்ட ப்ரோக்கோலி, கீரை மற்றும் அஸ்பாரகஸ் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். மேலும், தயிரை உணவில் சேர்த்துக் கொள்வது செரிமான பிரச்னைகளை தடுக்கும். இவற்றுடன் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வது நல்ல பலனைத் தரும். உண்ணும் உணவில் முழு தானியங்கள் மற்றும் விதைகள் இருப்பதை உறுதி செய்து கொண்டால் அவை உடலுக்கு நல்லது. இதனால், செரிமான பிரச்னைகள் வராது.

மேலும் சில வழிகள்
- வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்.
- புரோபயாடிக்குகளை எடுத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- தினமும் தண்ணீர் குடிக்கவும். மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்.
- செரிமான பிரச்னைகளை தவிர்க்க உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்கவும்.
- மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
- மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேர தூங்க வேண்டும்.
Image Source: Freepik