How To Get Sleep At Night: இன்றைய வாழ்க்கை முறையில் வேலை சுமை காரணமாக நாம் நம் தூக்கத்தை தொலைத்து விட்டோம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தூக்கம் அவசியம். ஆனால் நாமோ தூக்கத்தை தேடி அலைந்து வருகிறோம். இந்த சூழ்நிலையில், இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற நாங்கள் சில வழிகளை உங்களுக்கு சொல்கிறோம்.
உணவு பழக்கம்
முடிந்த வரை இரவு உணவை 7 மணிக்குள் எடுத்துகொள்ளவும். பின் 2 மணி நேரத்திற்கு பிறகு தூங்கவும். நீங்கள் தாமதமாக உணவு உட்கொண்ட பிறகு, உடனடியாக படுக்கைக்கு சென்றால், அது செரிமான பிரச்னையை ஏற்படுத்துவதோடு, தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

போனை விளக்கவும்
படுக்கைக்கு செல்லும் முன் மனதை அமைதியாக்கிக்கொள்ளவும். முடிந்த வரை ஸ்மார்ட்போன் செயல்பாட்டை தூங்கச் செல்லும் முன் விளக்கி வைக்கவும். இது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் இது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
மனதை அமைதிப்படுத்தவும்
நீங்கள் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இது மன நிலையை பாதிக்கும். இதனால் தூக்கம் போய்விடும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அமைதியாக பேசவும். மேலும் இசை கேட்கவும். இது உங்கள் மனதை பாதிக்காது. மேலும் நல்ல தூக்கத்தை அடைவீர்கள்.
அரோமாதெரபி செய்யவும்
உங்கள் மனநிலையை மேம்படுத்த அரோமாதெரபி சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக இதனை இரவு படுக்கை நேரத்தில் செய்யவும். அப்போது தான் நீங்கள் நல்ல தூக்கத்தை பெற முடியும்.
உடற்பயிற்சி
மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம். இதற்கு பதிலாக காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யவும்.
எண்ணெய் குளியல்
நல்லெண்ணெயை சூடு படுத்தி, அதை நன்கு உடல் முழுவது தேய்த்து, கதகதப்பான நீரில் குளிக்கவும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.
Image Source: Freepik