$
How to get silky hair at home : அடர்த்தியான, கருமையான மற்றும் மென்மையான தலைமுடியை பெற யார்தான் விரும்ப மாட்டார்கள். தலை முடியை பராமரிக்க நம்மில் பெரும்பாலானோர் சந்தைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி உபயோகிப்போம். ஆனால், அந்த பொருள்களால் கிடைக்கும் பயனை விட தீமை அதிகம். ஏனென்றால், இதில் அதிகமாக ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இது கூந்தலுக்கு ஊட்டமளிப்பதற்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும்.
முடிக்கு சரியான அளவு மற்றும் இயற்கையான ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம், முடி பிரச்சனைகளை குறைக்கலாம். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களே போதுமானது. இது உங்கள் பணத்தை சேமிப்பதுடன், உங்கள் தலைமுடிக்கு நன்மையையும் வழங்கும். மென்மையான மற்றும் அழகான கூந்தல் பெறுவதற்கான வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான முடி வேண்டுமா? இந்த 7 ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்களேன்!
மென்மையான முடிக்கு என்ன செய்ய வேண்டும்?

வாழைப்பழம் - 2.
பச்சை பால் - 2 முதல் 4 டீஸ்பூன்.
வாழைப்பழத்தை முடிக்கு தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
- தலைமுடி நுனி பிளவுகளை குறைக்க வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கும்.
- வாழைப்பழத்தை தலைமுடியில் தடவினால் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
- இதன் பயன்பாடு கூந்தலில் இருக்கும் சுருட்டையும் குறைக்கிறது.
தலைமுடிக்கு பச்சை பாலை தடவுவதன் நன்மைகள்

- இது உங்கள் தலைமுடியை மென்மையாக்க உதவுகிறது.
- ஏனெனில் இதில் வைட்டமின்-ஏ ஏராளமாக உள்ளது.
- பச்சைப் பால் உச்சந்தலையில் இருந்து முடியின் நீளம் வரை நிறைய ஊட்டச்சத்தை வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம் : இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!
கூந்தல் ஷனிங்காக இதை செய்யுங்கள்
- முடிக்கு ஊட்டமளிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் சுமார் 2 வாழைப்பழங்களை நன்கு மசிக்கவும்.
- இப்போது அதில் 2 முதல் 4 ஸ்பூன் பச்சை பால் சேர்த்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
- இந்த ஹேர் மாஸ்க்கை உச்சந்தலையில் இருந்து முடியின் நீளம் வரை பிரஷ் மூலம் தடவவும்.
- இதை தலைமுடியிலேயே சுமார் 1 மணி நேரம் அப்படியே விட்டு விடவும் விடவும்.
- இதற்குப் பிறகு, சுத்தமான தண்ணீரின் உதவியுடன் முடி மற்றும் உச்சந்தலையை கழுவவும்.
- நீங்கள் விரும்பினால்,ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
- இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
இந்த ரெசிபியை தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி பட்டு போலவும், பவுன்ஸியாகவும் இருக்கும்.
Image Credit: freepik