$
Hair gel for smooth and silky hair: தலைக்கு குளித்த பிறகு, முடியை உலர்த்திய பின் நம்மில் பலரது கூந்தல் கரடுமுரடானதாக காணப்படும். இவை, முடி உதிர்வை ஏற்படுத்தும். காரணம், கூந்தலில் அதிக ரசாயனங்கள் அடங்கிய பொருட்களைப் பயன்படுத்துவதே. சருமம் மற்றும் கூந்தலை பொறுத்தவரை நாம் எப்போதும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
தலைக்கு குளித்த பின்னர் முடி மென்மையாக இருக்க, ஹேர் ஜெல் ஒரு சிறந்த தீர்வு. இது உங்கள் தலைமுடியின் வறட்சியை நீக்கி, உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். பக்கவிளைவுகள் இல்லாத ஹேர் ஜெல்லை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : கோடையில் ஆரோக்கியமான கூந்தல் பெற மனதில் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!
ஹேர் ஜெல் தயாரிக்க தேவையான பொருட்கள்:
ஆளிவிதை - 2 ஸ்பூன்.
தண்ணீர் - 2 கப்.
அலோ வேரா ஜெல் - 2 ஸ்பூன்.
வைட்டமின் ஈ எண்ணெய் - 1 ஸ்பூன்.
ஆர்கன் ஆயில் (சைவம்) - 1 ஸ்பூன்.
லாவெண்டர் எண்ணெய் - 5 முதல் 10 சொட்டுகள்.
ஹேர் ஜெல் தயாரிக்கும் முறை:

- இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் 2 ஸ்பூன் ஆளிவிதை சேர்க்கவும்.
- இப்போது இதை அடுப்பில் வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின்னர், அடுப்பை அனைத்து நீரை ஆற வைக்கவும்.
- ஆளிவிதை ஜெல்லில் அலோ வேரா ஜெல், வைட்டமின் ஈ எண்ணெய், ஆர்கான் எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது உங்கள் கூந்தலை மென்மையாக்கும் ஹேர் ஜெல் தயார்.
இந்த பதிவும் உதவலாம் : முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!
எப்படி பயன்படுத்துவது?

இதைப் பயன்படுத்த, முதலில் உங்கள் தலைமுடியை ஷாம்பூவால் கழுவவும். பின்னர், தலைமுடி முக்கால்வாசி உலர்ந்ததும், ஹேர் ஜெல்லை தலைமுடியில் தடவவும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தலைமுடி பட்டுப் போலவும், பளபளப்பாகவும் மாறும். மேலும், இந்த ஜெல் உங்கள் தலைமுடியில் உள்ள சிக்கலை அகற்றும். ஆனால், இதை உச்சந்தலையில் பயன்படுத்த வேண்டாம்.
இந்த விஷயங்களை மனதில் வைக்கவும்

- நீங்கள் ஹேர் ஜெல்லைப் பயன்படுத்தும்போது, முடி உலர்ந்து இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். ஈரமான கூந்தலில் இதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.
இந்த பதிவும் உதவலாம் : இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!
- உங்கள் முடியின் அமைப்பைப் பொறுத்து, நீங்கள் அதை குறைந்த அல்லது அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- நீங்கள் உங்கள் தலைமுடிக்கு ஹேர் ஜெல்லைப் பூசும் போதெல்லாம், உங்கள் கைகளை சுத்தமாக வைத்து, பின்னர் அதை உங்கள் தலைமுடியில் தடவவும்.
Pic Courtesy: Freepik