பற்களின் நிறம் மஞ்சளாக இருந்தால், சிரிப்பதற்கே சங்கடமாக இருக்கும். நீங்கள் தேநீர், காஃபீ, சோடா போன்ற பானங்கள் உட்கொள்ளும் போது, உங்கள் பற்களை கறையாகும். அப்போது நீங்கள் வாய் கொப்புளிக்க வேண்டும். பொதுவாக உணவில் உள்ள சில அமிலங்கள் பற்களை சேதப்படுத்தும். குறிப்பாக பான்பாக்கு, புகைப்பழக்கம் போன்ற பழக்கங்களும் உங்கள் பற்களை சேதப்படுத்தலாம். நீங்கள் இந்த பற்களால், கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இதனை சரி செய்ய முடியும். பற்களின் நிறத்தை மாற்றும் வீட்டு வைத்தியத்தை இங்கே பார்ப்போம்.
பேக்கிங் சோடா

நீங்கள் பல் துலக்கும் போது, பேக்கிங் சோடா பயன்படுத்த வேண்டும். இது பற்களில் உள்ள கறைகளை நீக்கி, இயற்கையான முறையில் உங்கள் பற்களை வெள்ளையாக்குகிறது. ஆனால் இதனை அப்படியே பயன்படுத்த கூடாது. பல் பொடியுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். மேலும் இதனை தினமும் பயன்படுத்தக்கூடாது. வாரம் இரண்டு முறை பயன்படுத்தினாலே போதும். இல்லையெனில், இது உங்கள் பற்களை சேதப்படுத்தும்.
துளசி இலைகள்
துளசி இலைகளை கடுகு எண்ணெயுடன் இணைத்து பற்களில் தேய்க்கவும். இது உங்கள் பற்களை இயற்கையான முறையில் வெள்ளையாக்க உதவுகிறது. மேலும் இது பற்களில் கறைகளை உண்டாக்கும் பாக்டீரியாவை எதிர்க்க இது உதவும்.
இதையும் படிங்க: முத்து போன்ற வெண்மையான பற்களுக்காக இயற்கையான பல் பொடி
பழங்களின் தோல்
பருவகால பழங்களை நன்கு மென்று சாப்பிட வேண்டும். குறிப்பாக எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தோலை கொண்டு பற்களை தேய்க்கவும். இது பற்களை மென்மையாக்கவும், வலுவாக்கவும் உதவும். ஆனால் இதனை தினமும் பயன்படுத்த கூடாது. வாரம் இரண்டு முறை பயன்படுத்தினாலே போதும். நீங்கள் சிறந்த முடிவுகளை பெறுவீர்கள்.
தேங்காய் எண்ணெய்

வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க தேங்காய் எண்ணெய் சிறந்த திகழ்கிறது. இது பற்களில் உள்ள நச்சுக்களை அகற்றி, பற்களை இயற்கையான முறையில் வெண்மையாக்க உதவுகிறது. மேலும் பற்களில் கறைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க இது உதவுகிறது. இதனை கொண்டு வாயை கொப்பளித்து வந்தால், உங்கள் பற்கள் வெண்மையாகவும், வாய் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வேப்ப மரக்குச்சிகள்
வேப்பங்குச்சிகள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. குறிப்பாக இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக அறியப்படுகிறது. இது பற்களை வெண்மையாக்கவும், வாய் துர்நாற்றத்தை நீக்கவும், ஈறுகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன. இதனை கொண்டு பல் துலக்கினால், பல் இடுக்கில் இருக்கும் பாக்டீரியாக்கல் அழியும். இதனை அப்படியே பயன்படுத்த கூடாது. இதனை பயன்படுத்துவதற்கு முன் தண்ணீரில் சில நேரம் ஊற வைக்க வேண்டும்.
இந்த பதிவில் உள்ள தகவல்கள், தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன் பல் மருத்துவரை அணுகுவது நல்லது. குறிப்பாக நீங்கல் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் இருந்து ஆலோசனை பெற வேண்டும்.
Image Source: Freepik