விழிப்புணர்வு:
வயது அதிகரிக்கும்போது கருவுறுதல் அளவு குறையும் என்ற விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
கருவுறுதல் மையம்:
ஒரு நல்ல, நம்பகமான கருவுறுதல் மையத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம், அதில் சிறப்பு மருத்துவர்கள் மட்டுமின்றி,நோயாளிகளுடன் மனம் விட்டு பேசக்கூடிய மனநல ஆலோசகரும் இருக்க வேண்டும்.
ஆலோசனை:
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆலோசகர்கள் அடங்கிய குழு, தியானம், உடற்பயிற்சி, ஆதரவுக் குழுக்களின் சமாளிப்பு உத்திகளில் உங்களுக்கு உதவலாம், அங்கு சிகிச்சையில் இருக்கும் மற்ற சக நோயாளிகளை சந்தித்து பேசலாம்.
பாலியல் சிக்கல்களைக் கையாள்வது மற்றும் இந்த சிகிச்சைகள் தோல்வியுற்றால் என்ன செய்வது என்பது பற்றிய விருப்பங்களும் இந்த ஆலோசனை அமர்வுகளின் போது விவாதிக்கப்பட வேண்டும். தம்பதிகளும் சிகிச்சைக்கான நிதி திரட்டல்கள் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும்.
சோசியல் எக் ஃப்ரீசிங்:
முட்டை தானம் மற்றும் வளமான கருமுட்டையை பாதுகாக்கும் செயல்முறையைப் பற்றி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
மன அழுத்த பயிற்சிகள்:
கருவுறாமை மற்றும் அதன் சிகிச்சை பெரும்பாலும் கணிசமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனை குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
மனம் விட்டு பேசுங்கள்:
இத்தருணத்தில் தம்பதிகள் தங்களுக்குள் மனம் விட்டு பேச வேண்டும். அச்சங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவேளை குறை என்னிடம் இருந்தால் வாழ்க்கை துணை நம்பை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் போன்ற தேவையற்ற அச்சங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இருவரும் தங்களுக்கான சந்தேகங்கள் குறித்து பேசிக்கொள்ள வேண்டும்.
Image Source: Freepik