கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வரம். வருங்கால அம்மாக்கள் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்காக அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் உணவு, உடற்பயிற்சி மற்றும் வேலை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். அப்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது. கர்ப்ப காலத்தில் பெண்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்பிணிகள் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, செய்யும் காரியங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கர்ப்பிணிப் பெண்கள் சில நடவடிக்கைகள் மற்றும் உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவைகளைப் பாருங்கள்.
காஃபினிடம் இருந்து விலகுங்கள்:
கர்ப்பிணிகள் காபி சாப்பிடக் கூடாது. ஏனெனில் கர்ப்ப காலத்தில் காபியை அதிகமாக எடுத்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு காஃபின் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது இல்லை என்றாலும், வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 150 முதல் 300 மில்லிகிராம் வரை காஃபின் உட்கொள்ளக்கூடாது. காஃபின் தேநீர் மற்றும் காபியில் மட்டுமல்ல, சாக்லேட்கள், சோடாக்கள் மற்றும் சில மருந்துகளிலும் காணப்படுகிறது.
நீண்ட நேரம் உட்காரவோ நிற்கவோ கூடாது:
கர்ப்ப காலத்தில் அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பது நல்லதல்ல. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து நின்றால், கால்கள் மற்றும் நரம்புகளில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் நீண்ட நேரம் வசதியாக உட்கார அனுமதிக்க இடுப்பிற்கு சரியான சப்போர்ட்டை பயன்படுத்த வேண்டும்.
உங்கள் எடை மற்றும் தோரணை மாறும் என்பதால் இது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நாற்காலியை சரிசெய்ய முடியாவிட்டால், இடுப்பில் ஒரு சிறிய தலையணை அல்லது குஷன் வைக்கவும்.
வீக்கத்தைக் குறைக்க கால்களை உயரமாக வைக்கவும். நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்திருந்தால். ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு எழுந்து நின்று சற்றே நடக்கலாம். நீண்ட நேரம் உட்கார வேண்டியிருந்தால், ஒரு சிறிய ஸ்டூல் அல்லது பெட்டி மீது கால்களை உயரமாக வைக்கவும். அடிக்கடி ஓய்வெடுக்கவும். காலுக்கு வசதியான ஷூவை அணியுங்கள்.
சுய மருத்துவம் செய்யாதீர்கள்:
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சுய மருந்து பயனற்றது. சில ஆங்கில/சொந்த மருந்துகளால் பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சில மருந்துகள் உங்கள் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம்.
எந்தவொரு மருந்து அல்லது சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற மறக்காதீர்கள். சிறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகுவது நல்லது.
சூடுநீர் குளியல் வேண்டாம்:

சாதாரண நேரங்களில் நீங்கள் சோர்வாக இருக்கும்போது மிகவும் சூடான நீரில் குளிப்பது நன்றாக இருக்கும். ஆனால் கர்ப்ப காலத்தில் வலி நிவாரணத்திற்காக ஹாட் வாட்டர் டப்பில் குளிப்பது நல்லதல்ல. முதல் மூன்று மாதங்களில் உடல் வெப்பநிலை அதிகரித்தால், பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொதிக்க, கொதிக்க சூடான நீரில் குளிப்பதை விட, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
Image source: Freepik