$
தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்களை கவனிப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். பொதுவாக குழந்தைகள் தினமும் பால் சார்ந்த பொருட்களை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கென பல பால் பொருட்கள் சந்தையில் ஊடுருவி வருகின்றன. இதனை கவனமாக தேர்ந்தெடுப்பது பெற்றோர்களின் கைகளின் தான் உள்ளது. குழந்தைகளுக்கு பால் பொருட்களை வாங்கும் போது எவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டும் என்பதை ஹெர்பி ஏஞ்சல் R&D தலைவர் மருத்துவர் ஸ்வாதி ராமமூர்த்தி இங்கே பகிர்ந்துள்ளார்.
ஊட்டச்சத்து உள்ளடக்கம்

குழந்தைகளுக்கான பால் பொருட்களை தேர்ந்தெடுக்கும்போது, அவற்றின் ஊட்டச்சத்து மதிப்புக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். கால்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சீரான கலவையை வழங்கும் பால் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் கால்சியம் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை ஆதரிக்கிறது. கூடுதலாக, வைட்டமின்கள் மற்றும் தாதுகள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. எனவே, உங்கள் குழந்தைகள் சீரான உணவைப் பெறுவதை உறுதிசெய்ய, இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட பால் பொருட்களைத் தேர்வு செய்யவும்.
இதையும் படிங்க: குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுகள்!
ஆர்கானிக் பொருட்கள்
பால் பொருட்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு, அதில் உள்ள மூலப்பொருள் பட்டியலை படித்து பார்க்க வேண்டும். குறிப்பாக மூலிகை பொருட்களின் உள்ளடக்கம் நிறைந்த பால் பொருட்களை தேர்ந்தெடுப்பது நல்லது. செயற்கை இரசாயனங்கள் மற்றும் இனிப்புகள் நிறைந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகையால் மூலிகை மூலப்பொருள் கொண்ட பால் பொருட்களை தேர்வு செய்யவும்.
ஒவ்வாமை தகவல்
குழந்தைகளுக்கான பால் பொருட்களை வாங்கும் போது, அதன் லேபிளில் உள்ள ஒவ்வாமை தகவலைச் சரிபார்க்கவும். சில குழந்தைகளுக்கு லாக்டோஸ், சோயா போன்ற பொருட்களில் ஒவ்வாமை இருக்கலாம். மேலும் உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை இருந்தால், அதற்கு ஏற்றவாறு பொருட்களை தேர்வு செய்யவும். மேலும் பொருட்களை தேர்ந்தெடுப்பதற்கு முன் குழந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சுவை

உணவு பொருட்களின் சுவை மற்றும் அமைப்பு குழந்தைகளை ஈர்க்கும் வகையில் இருக்கும். அவற்றை தான் குழந்தைகளும் விரும்புவார்கள். அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களை தேர்ந்தெடுப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலாக இருக்கும். சில குழந்தைகள் சாக்லேட், ஸ்ட்ராபெரி போன்ற சுவையை விரும்புகிறார்கள். மேலும் சிலர் மென்மையான சுவையை விரும்புகிறார்கள். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆகையால் பால் பொருட்களை தேர்ந்தெடுக்கும் போது, குழந்தைகளின் விருப்பத்திற்காக மட்டுமல்லாமல், அவர்களது ஊட்டச்சத்துகளுக்கு ஏற்றவாறு பொருட்களை தேர்வு செய்ய வேண்டும்.
பாதுகாப்பு
எந்தவொரு பால் பொருட்களையும் வாங்குவதற்கு முன், அந்த பிராண்ட் குறித்து ஆராய வேண்டும். மேலும் அந்த பொருட்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்பதை அறிய வேண்டும். பாதுகாப்பான மற்றும் உயர்தர தயாரிப்புகளை வழங்குவதில் பிராண்டின் அர்ப்பணிப்பை நிரூபிக்கும் சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரங்களை அறிய வேண்டும். வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் படிப்பது மற்றும் பிற பெற்றோரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவது தயாரிப்பின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பற்றிய மதிப்பை அறிய உதவும்.
உங்கள் குழந்தைகளுக்கு சரியான பால் பொருட்களை தேர்ந்தெடுப்பது அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்க உதவும். ஊட்டச்சத்து உள்ளடக்கம், ஒவ்வாமை தகவல், சுவை, அமைப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நீங்கள் பால் பொருட்களை வாங்க வேண்டும். அவர்களின் விருப்பங்கள் மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பால் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை கொடுங்கள்.
Image Source: Freepik