ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது?

  • SHARE
  • FOLLOW
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது?


ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கச் செல்கிறீர்கள் என்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இனிமேலாவது கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் வழக்கமான அளவை விட குறைவாக சிறுநீர் கழிப்பது பல்வேறு பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

சிறுநீர் கழித்தல் என்பது சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை சிறுநீர்க்குழாய் வழியாக உடலின் வெளிப்புறத்திற்கு வெளியேற்றுவதாகும்.

மலமும், சிறுநீரும் உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் என்றாலும், உடல் நலம் எப்படி இருக்கிறது? முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா? ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்.

சிறுநீர் கழித்தல் என்பது உடலின் வடிகட்டுதல் செயல்முறையாகும், இதில் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற இது செயல்படுகிறது. இந்த நிலையில் உடலில் உள்ள நச்சுக்களை தண்ணீரால் வெளியேற்றி சிறுநீர்ப்பை சுத்தமாகும். ஆனால் நம்மில் பெரும்பாலோர் அதைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்கு வரம்பு இல்லை. அதேசமயம், இதை விட குறைவாக சிறுநீர் கழித்தால் அது உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கவனிக்கப்படாவிட்டால், இவை தீவிரமான பிரச்சனைகளாக உருவெடுக்கக்கூடும்.

எனவே, சிறுநீர் கழிப்பதன் அளவு குறைவது, என்னென்ன மாதிரியான அறிகுறிகளை நமக்கு உணர்த்துகிறது என்பதையும், ஆனால் அதற்கு முன் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

ஒரு நபர் தினமும் எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்?

பிளாடர் அண்ட் பவுல் ஆர்கனைசேஷன் (bladderandbowel.org) அறிவிப்பின் படி, ஒரு நாளைக்கு 4 முதல் 7 அல்லது 6 முதல் 10 முறை சிறுநீர் கழிப்பது சாதாரணமானது. ஏனெனில் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் கூட 2 முதல் 4 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இது உடல் வெப்பநிலை, சிறுநீர்ப்பை அளவு, வயது, உணவு மற்றும் பல உறுப்புகளின் செயல்பாடு ஆகியவற்றையும் சார்ந்துள்ளது.

ஆனால், இதை விட குறைவாக சிறுநீர் கழிக்கச் சென்றால், அது தொடர்ந்து நடந்தால், அது இந்த விஷயங்களின் அறிகுறியாக இருக்கலாம்.

குறைவான சிறுநீர் கழிப்பதற்கான அறிகுறிகள் என்ன? குறைவான சிறுநீர் கழிப்பதற்கான காரணம் என்ன?

  • உடலில் நீர் பற்றாக்குறை
  • சிறுநீர்ப்பை சரியாக இயங்காது
  • UTI தொற்று
  • உடலில் கால்சியம் அளவு அதிகரிப்பது சிறுநீரக செயல்பாட்டை பாதித்து சிறுநீரின் உற்பத்தியை குறைக்கும்.
  • புரோஸ்டேட் தொடர்பான பிரச்சனைகள், இதில் சிறுநீர் ஓட்டம் குறைகிறது.

இறுதியில் சிறுநீரகம் மற்றும் வயிறு தொடர்பான நோய்களாலும் இது நிகழலாம். எனவே, நீங்கள் குறைவாக சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால், இந்த விஷயங்களை மனதில் வைத்து மருத்துவரை அணுகவும்.

மேலும் கோடை காலம் வேறு வரப்போகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இப்போதே வெயில் செஞ்சுரி அடிக்க ஆரம்பித்துவிட்டது. எனவே நிறைய தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருங்கள்.

Image Source: Freepik

Read Next

Thyroid Disease: தைராய்டை முழுமையாக குணப்படுத்த முடியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்