$
அமர்ந்த இடத்திலேயே வேலை பார்க்கும் முறை அதிகரிப்பதால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உடல் பருமன் காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு உடல் பருமன் காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில், இதன் காரணமாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்கவும், உடல் பருமனை குறைக்கவும் இன்றைய காலகட்டத்தில் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலில் ஆற்றல் நிலை சிறப்பாக இருக்கவும் உதவுகிறது. ஆனால், ஜிம் மற்றும் உடற்பயிற்சிக்கு சில விதிகள் உள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றினால் தான் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக முழுப் பலனை பெறலாம். உணவு சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தகவலை பார்க்கலாம்.
வொர்க்அவுட்டிற்கு முன் எவ்வளவு நேரம் உணவு உண்ணலாம்?

உடற்பயிற்சிகளை செய்வதற்கு சரியான விதி உள்ளது. உணவு உண்ட பிறகு சுமார் 3 முதல் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். காலை, மதியம் அல்லது இரவு உணவிற்குப் பிறகு ஜிம்மிற்குச் செல்லவோ அல்லது உடற்பயிற்சி செய்யவோ நீங்கள் நினைத்தால், அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
நீங்கள் சிற்றுண்டி அல்லது லேசான உணவை எடுத்துக் கொண்டால், ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கழித்து கூட உடற்பயிற்சி செய்யலாம். வெறும் வயிற்றில் ஜிம் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது சோர்வாக உணரும் நபர்கள்.
- லேசான காலை உணவு
பழம் அல்லது தயிர் போன்ற சிறிய உணவை நீங்கள் சாப்பிட்டால், அது எளிதில் ஜீரணமாகும். அத்தகைய உணவை உண்ணும் பட்சத்தில் நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் வழக்கமாக 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் எந்த அசௌகரியமும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யலாம்.
- சமச்சீரான உணவு
கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய சமச்சீரான உணவை வொர்க்அவுட்டிற்கு சுமார் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ளலாம். இது உடலை ஆற்றலாக மாற்ற போதுமான நேரத்தை வழங்குகிறது.
- அதிக கொழுப்புள்ள உணவுகள்
நீங்கள் கணிசமான அல்லது அதிக கொழுப்புள்ள உணவை உட்கொண்டிருந்தால், சாப்பிட்ட பிறகு சுமார் 2 முதல் 3 மணி நேரம் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடற்பயிற்சியின் போது அசௌகரியம் அல்லது பிடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
உடற்பயிற்சிக்குப் பிறகு எப்போது உணவு உண்ணலாம்?

உடற்பயிற்சி செய்த அரை மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் பழச்சாறு அல்லது ஆரோக்கிய பானங்களை எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு உடல் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்ப சிறிது நேரம் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு கனமான அல்லது தீவிரமான பயிற்சிக்குப் பிறகு, நீங்கள் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து, ஏதாவது சாப்பிட்டு குடிக்க வேண்டும்.
பயிற்சிக்கு முன் காபி சாப்பிடலாம். காபி குடிப்பதால் உடலில் ஆற்றல் மட்டம் அதிகரிக்கிறது மற்றும் முன்பை விட அதிக ஆற்றலை உணர்கிறீர்கள். இது தவிர பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் ஜிம்மில் அல்லது அதிக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், பயிற்சியாளரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்யுங்கள். உடற்பயிற்சி டயட் உள்ளிட்ட முறைகளை முறையான நிபுணர்களின் ஆலோசனை பெற்ற செய்வது நல்லது.
Pic Courtesy: FreePik