Vaazhai Movie: ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும்?

  • SHARE
  • FOLLOW
Vaazhai Movie: ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும்?


How Long Can You be Active Without Food: வாழை படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக இதன் இறுதி காட்சி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் கதையின் நாயகனாக இருக்கும் சிறுவன் காலை எழுந்ததில் இருந்து சாப்பிடாமல் நடனமாடி உடல் ஆக்டிவ் ஆக வைத்துவிட்டு தொடர்ந்து சாப்பிடாமல் சோர்வடைவான்.

இதை பார்த்ததும் பலரும் வறுத்தப்பட்டாலும் சிலருக்கு பெரும் சந்தேகம் தான் எழுந்தது. அது ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும் என்பதுதான்.

ஒரு நபர் சாப்பிடாமல் எவ்வளவு காலம் வாழ முடியும் என சரியாக கூற முடியாது என்றாலும், 8 முதல் 21 நாட்களுக்கு உணவு அல்லது பானங்கள் இல்லாமல் மக்கள் உயிர் பிழைத்ததற்கான பதிவுகள் உள்ளன. சரி, தகவலை விரிவாக பார்க்கலாம்.

ஒரு நபர் எந்த உணவும் தண்ணீரும் இல்லாமல் உயிர்வாழ முடியும் என்பது தனிநபரின் வயது மற்றும் ஆரோக்கியம் பொறுத்தது.

உணவு இல்லாமல் எவ்வளவு காலம் வாழ முடியும்?

உணவு மற்றும் நீர் நுகர்வு என்பது மனித வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று. உங்கள் உடலுக்கு உணவு மூலங்களிலிருந்து தான் ஆற்றலும், நீரிலிருந்து நீரேற்றமும் கிடைத்து உங்களை செயல்பட வைக்கிறது.

நம்மால் தண்ணீரின்றி பல நாட்கள் உயிர்வாழ முடியும். நமது வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் நுகர்வு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நாம் உணவு இல்லாமல் நாட்கள் அல்லது சில வாரங்கள் கணக்கில் உயிர் வாழலாம்.

உயிர்வாழும் காலம் ஏன் மாறுபடுகிறது?

ஒரு நபரின் உடல் அதன் வழக்கமான வாழ்க்கை முறை செயல்பாடுகளைச் செய்ய போதுமான கலோரிகளைப் பெறவில்லை என்றால், பட்டினி என்று அழைக்கப்படுகிறது.

இருப்பினும் உடலில் உள்பாகங்களில் பாதிப்பு ஏற்படத் தொடங்கும். மனித உடல் கலோரிகளை கடுமையாக இழக்கும்போது, ​​அது எரியும் ஆற்றலின் அளவைக் குறைக்க வித்தியாசமாக செயல்படத் தொடங்குகிறது. ஊட்டச்சத்து மீட்டெடுக்கப்படாவிட்டால், பட்டினி என்பது உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது.

சாப்பிடாமல் உடலை எவ்வளவு நேரம் ஆக்டிவ் ஆக வைக்க முடியும்?

உணவு இல்லாமல் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பதற்கான சரியான பதில் இல்லை. அவரவர்கள் உடல் செயல்பாடுகள் ஆரோக்கியத்தை பொறுத்தது. அதேபோல் தான் சாப்பிடாமல் ஆக்டிவ் நாள் கணக்கில் இருக்க முடியும் என்றாலும் இதுவும் உங்களின் முந்தைய வாழ்க்கை முறையை பொறுத்து மாறுபடும்.

நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் மணிநேரங்கள் கணக்கில் ஆக்டிவ் ஆக இருக்க முடியும். ஆனால் ஒவ்வொரு உடலையும் வயதையும் பொறுத்து மாறுபடும். இருப்பினும் அதிகப்பட்சம் 24 மணிநேரம் வரை சாப்பிடாமல் உடலை ஆக்டிவ் ஆக வைத்திருக்க முடியும் என கூறப்படுகிறது.

உணவு, தண்ணீர் இல்லாமல் எவ்வளவு காலம் உயிர் வாழலாம்?

உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல், உடல் உயிர்வாழும் அதிகபட்ச நேரம் ஒரு வாரம் என்று நம்பகமான ஆதாரங்கள் கூறுகிறது. உணவு இல்லாமல், உயிர்வாழும் நேரம் 2 முதல் 3 மாதங்கள் வரை நீடிக்கலாம்.

உணவு சாப்பிடாமல் இருப்பதன் பக்க விளைவுகள் என்ன?

சிலர் நாட்கள் அல்லது வாரங்களுக்கு பட்டினியால் உயிர்வாழ முடியும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் உணவு சாப்பிடாமல் இருந்தால் உடலில் அல்சர் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். சாப்பிடாமல் இருப்பது எந்தவிதத்திலும் நல்லதல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளலாம். உணவு சாப்பிடாமல் இருப்பதன் பக்க விளைவுகளை பார்க்கலாம்.

மயக்கம்

தலைசுற்றல்

அறிவாற்றல் மாற்றங்கள்

குறைந்த இரத்த அழுத்தம்

மெதுவான இதயத்துடிப்பு

பலவீனம்

நீரிழப்பு

தைராய்டு செயல்பாட்டில் மாற்றங்கள்

வயிற்று வலி

எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள்

மாரடைப்பு

உறுப்பு செயலிழப்பு உள்ளிட்டவைகள் ஆகும்.

Image Source: FreePik, Social Media

Read Next

Nose Bleeding Causes: மூக்கில் இரத்தம் வருவதற்கு என்ன காரணங்கள் தெரியுமா? எப்படி சரிசெய்வது?

Disclaimer

குறிச்சொற்கள்