குடிப்பழக்கம் கல்லீரல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
குடிப்பழக்கம் கல்லீரல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?


What happens to your liver when you drink alcohol: இன்று பலரும் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, கவலை உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனைத் தவிர்க்க பெரும்பாலான ஆண்கள் சில ஆரோக்கியமற்ற பழக்கங்களைக் கையாள்கின்றனர். இதில் புகைபிடித்தல், மது அருந்துவது உள்ளிட்டவை அடங்கும். ஆனால், உண்மையில் இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். மது அருந்துவது பாதுகாப்பானதா என்ற விவாதம் எப்போதும் இருந்து வருகிறது.

சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களின்படி, மது அருந்துவது நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதாகக் கருதப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மது அருந்தும் போது, அளவைப் பொருட்படுத்தாமல் அருந்துவது அமிலத்தன்மை மற்றும் இரைப்பை அழற்சி போன்ற லேசான பிரச்சனைகள் முதல் கல்லீரல் நோய், இதய நோய் மற்றும் கணையக் கோளாறு போன்ற கடுமையான நிலைகள் வரையிலான ஆபத்தைத் தருகிறது. மேலும், இந்த நோய்களுக்கு அதிர்ச்சி, நோய்த்தொற்றுகள், தன்னுடல் தாக்கக் கோளாறுகள் போன்ற காரணிகளும் பங்களிக்கக் கூடும். எனினும், மது அருந்துவது குறிப்பிடத்தக்க, தவிர்க்கக் கூடிய காரணமாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!

மது அருந்துவதால் உடலில் ஏற்படும் தீய விளைவுகள்

செரிமான ஆரோக்கியத்தில் பாதிப்பு

ஆல்கஹால் அருந்துவதால் குமட்டல், வாந்தி, மார்பு மற்றும் வயிற்றில் எரியும் உணர்வுகள் போன்றவை ஏற்படலாம். இன்னும் கடுமையான நிலைகளில் வாந்தியில் இரத்தம் போன்ற அறிகுறிகளுடன் இரைப்பை அழற்சி, உணவுக்குழாய் அழற்சி மற்றும் டியோடெனிடிஸ் உள்ளிட்ட பல இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர, வழக்கமாக மது அருந்தும் நபர்களுக்கு ஏற்படும் ஆரம்ப மற்றும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக செரிமான ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவதாகும். குடல் ஆரோக்கியம் பாதிப்படைவது, செரிமான ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

கணைய அழற்சி

ஆல்கஹால் உட்கொள்வதால் மிகவும் தீவிரமான நிலைகளில் ஒன்றாக கணைய அழற்சி ஏற்படுகிறது. இது கடுமையான மற்றும் நாள்பட்ட என இரண்டு வடிவங்களில் ஏற்படலாம்.

கடுமையான கணைய அழற்சியில், குமட்டல், வாந்தி, முதுகு வலி, கடுமையான வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளுடன் அடிக்கடி மருத்துவ அவசர நிலை ஏற்படுகிறது. மேலும், இதன் கடுமையான நிலையாக கடுமையான கணைய அழற்சி அதிர்ச்சி, உறுப்பு செயலிழப்பு போன்ற அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம்.

மற்றொரு வடிவமான நாள்பட்ட கணைய அழற்சி காலப்போக்கில் உருவாகிறது. இதனால் தொடர்ந்து, உடல் எடையிழப்பு, வயிற்று வலி, நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகிறது. இதன் கடுமையான சந்தர்ப்பங்களில் கணைய புற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Liver Cirrhosis Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட காரணமாம்..

ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு என்ன?

தொடர்ந்து, வழக்கமாக மது அருந்துவது கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணமாக அமைகிறது. இந்த அதிகப்படியான குடிப்பழக்கம், கடுமையான ஹெபடைடிஸை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, குமட்டல், வயிற்று வலி, வாந்தி உள்ளிட்டவை ஏற்படலாம். மேலும், நீடித்த மற்றும் வழக்கமான ஆல்கஹால் பயன்பாட்டிற்குப் பிறகு இந்த நாள்பட்ட கல்லீரல் நோய் உருவாகிறது. மேலும், இது எடையிழப்பு, வயிற்று வலி, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், ஆல்கஹால் கல்லீரல் செயல்பாட்டை கடுமையாக பாதித்து சிரோசிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.

ஆல்கஹால் அருந்துவது கல்லீரலின் ஒழுங்காக செயல்படும் திறனை பாதித்து, கொழுப்பு கல்லீரல் நோயை உருவாக்குகிறது. மது அருந்துவது ஆல்கஹால் ஹெபடைடிஸ் சிரோசிஸாக முன்னேறுகிறது. இதனால் பலவீனமான கல்லீரல் செயல்பாடு, வடுக்கள், சாத்தியமான கல்லீரல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும் இது கல்லீரலின் அத்தியாவசிய புரதங்கள் மற்றும் இரத்த உறைதல் காரணிகளை உற்பத்தி செய்யும் திறனைத் தடுக்கிறது. இது தவிர இரத்தப்போக்கு கோளாறுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. கூடுதலாக, இவை கல்லீரலின் நச்சுத்தன்மை குறைகிறது. இதன் காரணமாக, உடலில் நச்சுக்கள் குவிந்து சரிசெய்ய முடியாத நிலை ஏற்படலாம்.

இவ்வாறு மது அருந்துவது கல்லீரல் ஆரோக்கியம் உட்பட உடலின் பல்வேறு முக்கிய உறுப்புகளைப் பாதிக்கிறது. எனவே மது அருந்துவதை முடிந்த வரை தவிர்ப்பதன் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Fatty Liver Treatment: கல்லீரல் நோய்களை குணமாக்கும் சிறந்த பானங்கள் எது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Lemongrass Tea: லெமன்கிராஸ் டீ இரத்த அழுத்தத்தை குறைக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Disclaimer