$
Benefits Of Drinking Nettle Tea For Hair: முடி உதிர்வு அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினையாக மாறிவருகிறது. இதை தடுக்க நாம் பயன்படுத்தாத பொருட்களே இருக்க முடியாது. அப்படி, நீங்களும் எல்லாவற்றையும் முயற்சி செய்து சோர்வடைந்து விட்டீர்கள் என்றால், இது உங்களுக்கான பதிவு. முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று DHT ஹார்மோனின் ஏற்றத்தாழ்வு. இது மயிர்க்கால்களை அடைந்து வேர்களை வலுவிழக்கச் செய்து முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.
உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருந்தால், DHT உற்பத்தியும் சிறப்பாக இருக்கும். இதில், நல்ல விஷயம் என்னவென்றால் சில எளிய வைத்தியங்கள் மூலம் எளிதாக DHT ஹார்மோன்களை சமநிலைப்படுத்தலாம். இது தவிர, சில ஸ்பெஷல் ரெசிபிகளும் உங்கள் முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Remedy : ஒரே மாதத்தில் முடி இடுப்புவரை நீளமாக வளர இதை செய்தால் போதும்!
நெட்டில் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறுகாஞ்சொறி டீ முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன் இன்னும் சில மூலிகை பொருட்களை சேர்த்து பருகி வந்தால், விரைவில் முடி உதிர்வில் இருந்து விடுபடலாம். இது குறித்து, டயட்டீஷியன் மன்பிரீத் கல்ரா முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும் சில டிப்ஸ் காலை நமக்கு வழங்கியுள்ளார். அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தலைமுடி உதிர்வத் தடுக்கும் நெட்டில் டீ

தேவையான பொருட்கள்:
சிறுகாஞ்சொறி தேநீர் பை - 1.
கொத்தமல்லி விதைகள் - 1 ஸ்பூன்.
வெந்தய விதை - 1/2 ஸ்பூன்.
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்.
செய்முறை:
ஒரு டீ பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் மற்றும் அனைத்து விதைகளையும் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்து சிறிது வற்றும் வரை கொதிக்க வைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். இப்போது, அதில் ஒரு நெட்டில் டீ பேக்கை சேர்த்து, நன்றாக டிப் செய்யவும். நிறம் மாறியவுடன் டீ பேக்கை நீக்கவும். இப்போது முடி உதிர்வை கட்டுப்படுத்தும் நெட்டில் இலை டீ ரெடி.
இந்த பதிவும் உதவலாம் : Hair Care Tips: பார்லருக்கு செல்லாமல் வீட்டிலேயே நரைமுடியை கறுப்பாக்கலாம்!
சிறுகாஞ்சொறி டீ குடிப்பதன் நன்மைகள்:

- கொத்தமல்லி விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
- பெருஞ்சீரகம் விதைகளில் அனெத்தோல் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
- வெந்தய விதைகளில் கேலக்டோமன்னன் உள்ளது, இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
- செந்தட்டி என அழைக்கப்படும் சிறுகாஞ்சொறி செடி டீயில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை DHT ஆக மாற்றுவதற்கு காரணமான நொதியின் செயல்பாட்டைத் தடுக்கும் சில சேர்மங்களைக் கொண்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Vitamin E for Hair : அடர்த்தியான கூந்தலை பெற வைட்டமின் E கேப்ஸ்யூலை இப்படி யூஸ் பண்ணுங்க!
இந்த டீயில் காணப்படும் இந்த அனைத்து பண்புகளும் உங்கள் தலைமுடி பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. மேலும், இது முடி தொடர்பான பிரச்சனைகள் மட்டுமின்றி பல உடல்நல பிரச்சனைகளையும் தடுக்கிறது.
Pic Courtesy: Freepik