Expert

Anti-Aging Tips: வயதான தோற்றத்தை குறைத்து எப்பவும் நீங்க இளமையா தெரிய இதை செய்யுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Anti-Aging Tips: வயதான தோற்றத்தை குறைத்து எப்பவும் நீங்க இளமையா தெரிய இதை செய்யுங்கள்!


How do you make a detox drink for glowing skin : மாசுபாடு மற்றும் மாறி வரும் வாழ்க்கைமுறை காரணமாக சருமம் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினாலும், தோல் வறட்சி, முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதே போல, உடலில் தண்ணீர் சத்து இல்லாததால், சருமத்தில் வயதான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், உடலில் ஆரோக்கியமான கொழுப்பு இல்லாததால், முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அத்துடன் அதிக வெயில் காரணமாகவும் சருமம் வறட்சியாக காணப்படும். இதனால், சரும சுருக்கம், முதுமையான தோற்றத்தை ஏற்படுத்தும். டயட்டீஷியன் மன்ப்ரீத் கல்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில், விரைவில் முதுமையாவதை தடுக்க சில உதவிக்குறிப்புகளை வழங்கியுள்ளார். அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!

வயதான அறிகுறிகளை அகற்றும் டிடாக்ஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1.5 லிட்டர்.
வெள்ளரிக்காய் - சுமார் 1 (துருவியது)
எலுமிச்சை - ஒன்று.
சியா விதைகள் - ஒரு தேக்கரண்டி.
புதினா இலைகள் - நான்கு முதல் ஐந்து.
பச்சை ஏலக்காய் - 2 முதல் 3.
இஞ்சி - 10 முதல் 15 கிராம்.

டிடாக்ஸ் வாட்டர் செய்முறை?

  • முதலில், ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பவும்.
  • அதில், இப்போது வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
  • இதையடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  • பின் சியா விதைகளை தண்ணீரில் கலக்கவும்.
  • பின்னர், புதினா இலைகள், இஞ்சி, ஏலக்காய் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?

டிடாக்ஸ் வாட்டரின் நன்மைகள் என்ன?

  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் சியா விதைகளில் காணப்படுகின்றன. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
  • வைட்டமின் சி எலுமிச்சை சாற்றில் காணப்படுகிறது. இவை சருமத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை அகற்றவும், தோலில் இருந்து வயதான அறிகுறிகளை அகற்றவும் உதவியாக இருக்கும்.
  • புதினாவில் மெந்தோல் கூறுகள் உள்ளன. அவை சருமம் சிவத்தல் மற்றும் எரிச்சலை அகற்ற உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம் : இனி காசு கொடுத்து வாங்க தேவையில்லை. உங்கள் முகப்பொலிவிற்கான சிறந்த நைட் கிரீமை வீட்டிலேயே செய்யலாம்

  • அதே போல, வெள்ளரிக்காயில் காணப்படும் செலிக் கலவை சருமத்தின் கொலாஜனை அதிகரிக்கச் செய்கிறது, இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது.
  • இந்த நீரில் உள்ள ஏலக்காய் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது சருமத்தின் மெல்லிய கோடுகளை அகற்ற உதவுகிறது.

இந்த டிடாக்ஸ் தண்ணீரை ஒரு வாரம் தொடர்ந்து பருகவும். பின், சில நாட்கள் இடைவெளி கொடுத்து, மீண்டும் இதை பின்பற்றவும். இந்த டிடாக்ஸ் நீர் உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது மற்றும் தோல் வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Lactic Acid: லாக்டிக் அமிலம் சருமத்திற்கு இவ்வளவு நல்லதா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version