Lactic Acid: சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. டிவி போன்ற விளம்பரங்களை பார்த்தும், பிறரின் பரிந்துரையை கேட்டும் பலரும் பலவிதமான அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் பலரும் இப்படி செய்வதில்லை. தோல் பராமரிப்பு பொருட்களின் தன்மையை முழுமையாக அறிந்துக் கொள்ள விரும்புகின்றனர். தோல் பராமரிப்பு க்ரீம்களில் உள்ள பொருட்களை சரிபார்க்கத் தொடங்கிவிட்டனர்.
எந்தெந்த ரசாயணம் எந்த அளவில் கலக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்துக் கொள்கின்றனர். நீங்கள் இப்படி செய்யவில்லை என்றால் இனி செய்வது அவசியம். அப்படி செய்யும்பட்சத்தில் அதில் உள்ள லாக்டிக் அமிலத்தின் அளவை சரிபார்ப்பது மிக முக்கியம். லாக்டிக் அமிலம் என்றால் என்ன, அவை சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
லாக்டிக் அமிலம் என்றால் என்ன?

லாக்டிக் அமிலத்தின் செயல்பாடு தோலில் ஈரப்பதத்தை அதிகரிப்பதாகும். லாக்டிக் அமிலம் சருமத்தை ஈரப்பதமாக்கும். தோலின் மேல் அடுக்கில் காணப்படும் கடினமான பொருளை மென்மையாக்க இது உதவும். இந்த கடினமான பொருள் கெரட்டின் என்று அழைக்கப்படுகிறது. லாக்டிக் அமிலம் தோல் மற்றும் நகங்களில் பயன்படுத்தப்படுகிறது. கண்கள், உதடுகள், மூக்கின் உள்ளே அல்லது அந்தரங்க பாகங்கள் போன்ற பிற உணர்திறன் பகுதிகளில் இதைப் பயன்படுத்த வேண்டாம்.
உங்கள் தோல் எரிந்தாலும் அல்லது வெட்டப்பட்டாலும், லாக்டிக் அமிலத்தைப் பயன்படுத்தக்கூடாது. லாக்டிக் அமிலத்தைப் பயன்படுத்துவதால் உங்கள் உடல்நலத்தில் ஏதேனும் பக்கவிளைவுகளைக் கண்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
சருமத்திற்கான லாக்டிக் அமிலத்தின் நன்மைகள்
- லாக்டிக் அமிலத்தின் பிரதான பயன்பாடு சருமத்தை ஒளிரச் செய்வதாகும்.
- வறண்ட சரும பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமானால், லாக்டிக் அமிலத்தை உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- சுருக்கங்கள் மற்றும் முகங்களில் உள்ள கோடு போன்ற பிரச்சனையை லாக்டிக் அமிலம் சரி செய்கிறது.
- ஹைப்பர் பிக்மென்டேஷனால் தோலில் தெரியும் கரும்புள்ளிகளைக் குறைக்க லாக்டிக் அமிலத்தைப் பயன்படுத்தலாம்.
- லாக்டிக் அமிலம் முகப்பரு மற்றும் முகப்பரு தழும்புகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
- லாக்டிக் அமிலத்தின் பயன்பாடு தோலில் உள்ள வீக்க பிரச்சனையை நீக்குவதற்கும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
லாக்டிக் அமிலத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

லாக்டிக் அமிலம் சீரம் அல்லது டோனர் வடிவில் சந்தையில் கிடைக்கிறது. இதை கிரீம் அல்லது லோஷனுடன் கலந்து பூசலாம். லாக்டிக் அமிலத்தை சாதாரண வெப்பநிலையில் சேமிக்கவும். இதை பயன்படுத்துவதற்கு முன்பு காலாவதி தேதியைச் சரிபார்க்கவும். லாக்டிக் அமிலம் பழையதாக இருந்தால், அதன் பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
லாக்டிக் அமிலத்தின் பக்க விளைவுகள்
லாக்டிக் அமிலத்தை அதிகமாகப் பயன்படுத்தினால் லேசான கூச்ச உணர்வு ஏற்படலாம்.
உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு லாக்டிக் அமிலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இதனால் எரிச்சல் ஏற்படலாம்.
கண்கள், வாய் அல்லது உதடுகளின் தோலுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
சருமத்திற்கு லாக்டிக் அமிலம் பல இன்றியமையாத பலன்களை வழங்குகிறது. இதுபோன்ற கூடுதல் ஆரோக்கிய தகவலுக்கு Onlymyhealth உடன் இணைந்திருங்கள்.
Image Source: Freepik