Tips For Glowing Skin : சருமம் எப்பவும் பொலிவுடன் இருக்க இந்த விஷயங்களை பின்பற்றுங்க!

  • SHARE
  • FOLLOW
Tips For Glowing Skin : சருமம் எப்பவும் பொலிவுடன் இருக்க இந்த விஷயங்களை பின்பற்றுங்க!


Beauty tips for women : சருமத்தின் பொலிவைத் தக்கவைக்க, நாம் பல வழிமுறைகளை பின்பற்றுவோம். பல சமயங்களில், இதற்காக தினமும் பார்லர் சென்று, பலவிதமான சிகிச்சைகள் செய்துகொள்வதுடன், வீட்டில் பாட்டி சொன்ன வீட்டு வைத்தியத்தைக்கூட முயற்சிப்போம்.

ஆனால் சருமத்திற்கு மிக முக்கியமான விஷயம், அதை சரியான முறையில் கவனித்துக்கொள்வதுதான். இந்த உதவிக்குறிப்புகளுடன், சருமத்தின் பளபளப்பு நீண்ட நேரம் இருக்க, சில விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : கோடையில் உங்கள் சருமத்தை காக்க வேண்டுமா? உங்களுக்கான ஆயுர்வேத உணவு பட்டியல் இங்கே

வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும்

நமக்கு ஏற்படும் சருமம் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய நாம் பெரும்பாலும், பல பொருட்களை பயன்படுத்துவோம். இவற்றுடன் தோல் பராமரிப்பு வழக்கத்தையும் கவனிக்க வேண்டும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். சருமத்தை முறையாக பராமரித்தால், சருமம் ஆரோக்கியமாக இருப்பதுடன், பளபளப்பாகவும் இருக்கும்.

எனவே, நீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம், நீங்கள் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால், அதிகப்படியான சூரிய ஒளி உங்கள் சருமத்தை மங்கச் செய்யும். அதனால் சன்ஸ்கிரீன் தடவிய பின்னரே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற மற்றும் சரியான கிரீமாய் தேர்வு செய்யுங்கள். இவற்றை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும்

அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற, நீங்கள் பல விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில், உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள்.

இதற்கு கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பால் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். காலை அல்லது இரவில் உ ங்கள் முகத்தில் தடவவும். இதன் மூலம், உங்கள் சருமம் பளபளப்பாகவும், நிறத்திலும் இருக்கும். இந்த குறிப்புகளை கவனித்துக்கொள்வதன் மூலம், உங்கள் சருமத்தை நீங்கள் ஆரோக்கியமாக வைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : உங்கள் சருமத்தை இப்படி பராமரித்தால், 30 வயதிற்கு பிறகும் கூட உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்புடனும் இருக்கும்

தோல் பராமரிப்பு பொருட்கள்

சருமத்தைப் பொறுத்தவரை, நாம் ஒவ்வொரு முறையில் முகத்தில் வெவ்வேறு பொருட்களை பயன்படுத்துவோம். ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன், அவற்றின் தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், சருமத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்படும் பொருட்கள் ஏராளம். அவற்றைச் சரியாகப் படித்து, உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என தெரிந்து பயன்படுத்துங்கள். இதன் மூலம், உங்கள் சருமத்திற்கு எந்த வகையான தயாரிப்புகள் பொருந்தும் மற்றும் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

Image Credit: freepik

Read Next

Skincare Guide: பார்லர் போகாமல் உங்க முகம் பளீரென இருக்க தாமரை விதையை இப்படி யூஸ் பண்ணுங்க!

Disclaimer