ஆண், பெண் என இருபாலருக்கும் அடிவயிறு, தொடை, கைகள் ஆகிய பகுதிகள் பெரிதாகும் போது ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படும். பெரும்பாலும் பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அடிவயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படுகிறது.
இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸைப் போக்க பல வகையான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், இது உடலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் ரிமூவல் க்ரீம்கள் சருமத்திற்கு ஒத்துவராது.

மேலும் இதன் காரணமாக, அவர்களுக்கு அடிக்கடி ஒவ்வாமை ஏற்படுகிறது. இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே வீட்டு வைத்தியம் செய்யலாம். இதற்கான பொருட்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்…
பாதாமில் இருந்து நேச்சுரல் ஸ்க்ரப் செய்யலாம்:
ஸ்ட்ரெட்ச் மார்க்ஸைக் குறைக்க பாதாம் பருப்பைப் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் பாதாம் பவுடர், சர்க்கரை, காபி, தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். இதை நன்றாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.
தினமும் குளிப்பதற்கு முன் இந்த பேஸ்ட்டை ஸ்ட்ரெச் மார்க் உள்ள இடத்தில் தடவவும். சில நாட்களில் வித்தியாசத்தை காண்பீர்கள்.
உருளைக்கிழங்கு சாறின் மேஜிக்:
உருளைக்கிழங்கு சாறு உடலில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பயன்படுகிறது. உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது.
உங்கள் உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க வேண்டுமானால், உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து, ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடத்தில் தடவவும். இந்த பேஸ்ட்டை தினமும் தடவி வந்தால், சில நாட்களில் உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க் படிப்படியாக மறைந்துவிடும்.
எலுமிச்சை தோலை இப்படி பயன்படுத்துங்க:
எலுமிச்சை தோல் பவுடர் பல அழகு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள கறைகளை குறைக்க இது மிகவும் பயனுள்ள தீர்வாகும். உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்களைப் போக்க எலுமிச்சை தோலைப் பொடி செய்து பயன்படுத்தலாம்.
இதற்கு எலுமிச்சை தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேனை கலக்கவும். இந்த பேஸ்ட்டை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மீது மெதுவாக தடவி ஸ்கரப் செய்யவும்.