அதிகம் உப்பு சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை 40% அதிகரிக்குமாம்! எப்படி தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
அதிகம் உப்பு சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை 40% அதிகரிக்குமாம்! எப்படி தெரியுமா?


அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் புற்றுநோயுடன் தொடர்புடையது என சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவில் முந்தைய ஆராய்ச்சியில் வெளியிடப்பட்டது. ஆராய்ச்சியின் படி, அதிகப்படியான உப்பு உட்கொள்வது வயிற்றின் பாதுகாப்பு புறணியை பலவீனப்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திசு சேதம் மற்றும் புற்றுநோய் அபாயம் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Male Breast Cancer: ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும் தெரியுமா.? இதன் அறிகுறிகள் இங்கே…

எவ்வளவு உப்பு உட்கொள்ளலாம்?

தினசரி உப்பு உட்கொள்ளல் அளவானது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். எஃப்.டி.ஏ படி, தினமும் 2,300 மில்லிகிராம் சோடியத்தை உட்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இது தோராயமாக, ஒரு டீஸ்பூன் டேபிள் உப்பிற்குச் சமமாகும்.

எனினும், பல்வேறு உணவுப்பொருள்களில் உப்பை அதிகம் சேர்ப்பதாலும், கூடுதல் உப்பு எடுத்துக் கொள்வதை விரும்பினாலும் உடல் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உணவில் சுவைக்காக சிறிதளவு உப்பு சேர்ப்பது பாதிப்பில்லை எனக் கூறினாலும், பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை மீறுவதால் பல்வேறு உடல்நல அபாயங்களைச் சந்திக்கலாம்.

அதிகப்படியாக உப்பை எடுத்துக்கொள்வதால் வயிற்றுப் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது?

  • முதல் காரணமாக, அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் ஆனது, வயிற்றில் உள்ள இரைப்பை சவ்வை பாதிக்கப்படையச் செய்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக குடலில் உள்ள சளி போன்ற சவ்வை பாதிக்கிறது. இதனால், புற்றுநோய்க்கு தொற்றுவாயாக இருக்கும் குடல் மெடபிளாசியா உருவாகிறது.
  • இரண்டாவதாக, வயிற்றில் உப்பு அதிகமாவதன் காரணமாக ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற ஒரு வகையான பாக்டீரியா செழித்து வளர காரணமாக அமைகிறது. இந்த வகை பாக்டீரியா ஆனது வயிற்றுப் புற்றுநோய் தூண்டுதலுக்குக் காரணமாகிறது.

வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் UK Biobank இன் தரவை பகுப்பாய்வு செய்ததில், உணவில் அடிக்கடி உப்பு சேர்க்கும் நபர்கள், உப்பு சேர்க்காதவர்களைக் காட்டிலும் வயிற்றுப் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு 41 சதவீதம் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.

வயிற்றுப் புற்றுநோய் காரணிகள்

வயது, மது மற்றும் புகையிலை பயன்பாடு, மற்றும் சமூகப் பொருளாதார நிலை போன்ற வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற பிற காரணிகளை அடிப்படையாக வைத்தும் புற்றுநோய் அபாயம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்திலேயே வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிவதன் மூலம் எளிதில் சிகிச்சை பெற முடியும். NIH இன் படி, புற்றுநோய் இல்லாத ஒருவரைப் போல, ஆரம்பகால வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் 75 சதவிகிதம் அதிகமாக இருப்பார்கள். இவர்களுக்கு இந்த பாதிப்பு 35 சதவீதமாகக் குறைகிறது.

அதே சமயம், வயிற்றுப் புற்றுநோயானது கவனிக்கப்படாத போது, பெரிய பிரச்சனையை உருவாக்கலாம். இதன் ஆரம்ப கால அறிகுறிகளாக, வயிற்றுக்கோளாறு, அஜீரணம், வீங்கிய உணர்வு போன்றவை ஏற்படலாம். வயிற்றுப் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிக்கும் காரணியாக அமைவது மது மற்றும் புகையிலை பயன்பாடு போன்றவையே ஆகும்.

எனவே அதிகப்படியான உப்பு நிறைந்துள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சிகள், ஊறுகாய், மற்றும் சிப்ஸ்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும், தினமும் 6 கிராம் அளவிற்கு குறைவாகவே உப்பு எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இதய மற்றும் பிற உடல் நலப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதுடன், வயிற்றுப் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தையும் பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cancer Causing Foods: புற்றுநோயை உண்டாக்கும் அபாய உணவுகள் இதுதான்.!

Image Source: Freepik

Read Next

Vitamin D and Cancer: வைட்டமின் D புற்றுநோய் ஆபத்தை 70 சதவீதம் குறைக்கும் என ஆய்வில் தகவல்!

Disclaimer