அவகேடோ (வெண்ணெய் பழம்):
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவகேடோ, தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. அதிக கலோரிகள் கொண்டுள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்போருக்குச் சிறந்தத் தேர்வு.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
- வாழையைவிட அதிக பொட்டாசியம் கொண்டது.
- கொலஸ்ட்ரால், டிரைகிளைசரைட் அளவைக் குறைக்கும்.
- கர்ப்பப்பையின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவுகிறது.
கிவி:
சீனாவிலிருந்து வருகிறது கிவி. சற்று புளிப்புச் சுவைகொண்ட பழம் என்பதால், சாலட் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
- வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், சருமம், கூந்தலுக்கு நல்லது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- டி.என்ஏ சிதைவுகளில் இருந்து காக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- உடல் எடை குறைக்க உதவுகிறது.
- செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.
தக்காளி:
வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன.
- ஆல்பா-டொமாட்டின் (Alpha-tomatine) என்ற சத்து, ப்ராஸ்டேட், வயிறு, நுரையீரல், மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்கும்.
- லைகோபீன், இதய நோய்களைத் தடுக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
- பார்வைத்திறனை மேம்படுத்தும்.
- உடல் எடை குறைய உதவும்.
- ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கும்.
- பித்தப்பைக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
- ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
- உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
- இயற்கையான ஆன்டிசெப்ட்டிக்.
- சருமம் பொலிவு பெறும்.
- வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
வெள்ளரி:
வெள்ளரியில் ஹைபிரிட் வகைகள் வந்துவிட்டதால், வருடம் முழுக்க வெள்ளரிக்காய் கிடைக்கிறது.கோடைக்கு உரிய காய்தான் வெள்ளரி. பங்குனி, சித்திரை, வைகாசி அதாவது மார்ச் முதல் ஜூன் வரையில் விளையும் பயிர்தான் வெள்ளரி. இயல்பான நாட்டு வெள்ளரி என்பது இதுதான். இது உடலுக்கு உகந்தது. இதைச் சாப்பிட்டுவர, சத்துக்கள் போதிய அளவில் கிடைக்கும். சீசன் இல்லாத சமயங்களில் வரும் அடர்பச்சை வெள்ளரியைத் தவிர்த்து, நாட்டுவெள்ளரியைச் சாப்பிடலாம்.
முள்ளங்கி:
முள்ளங்கி சாப்பிட்ட பின் மூக்கில் தண்ணீர் வருவது, சளி பிடிப்பது போன்ற உணர்வு இருந்தால், நுரையீரலில் உள்ள கழிவை வெளியேற்றுகிறது என்று அர்த்தம். இதை, முள்ளங்கி அலர்ஜி என எடுத்துக்கொள்ள கூடாது.வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம், கால்சியம் ஆகியவை உள்ளன.
- சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும்.
- சிறுநீரகக் கற்கள் உருவாகாது.
- உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
- உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.
- மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
- புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.
- கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
- நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும்.
- மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.
- ரத்தத்தில் உள்ள பிலுருபினை சீர்செய்வதால், மஞ்சள்காமாலையைக் குணமாக்க உதவும்.
- உடல் எடையைக் குறைக்க உதவும்.
- வெண்புள்ளிகள் நோயின் தீவிரத்தை குறைக்கும்.
- நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
உருளைக்கிழங்கு:
வைட்டமின் சி, பி காம்ப்ளெக்ஸ் இருப்பதால், சருமத்துக்கு நல்லது.
கால்சியம், மக்னீசியம் நிறைந்துள்ளன.
- செரடோனின், டோபோமைன் உள்ளதால், மனம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.
- தீக்காயங்களைச் சரிசெய்யும்.
- மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும்.
- மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை கூடும்.
- செரிமான சக்திக்கு உதவும்.
- மூளை வளர்ச்சிக்கு உதவும். மூளை செல்களைத்தூண்டி, புத்துயிர் பெறச் செய்யும்.
- புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும்.
- எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
- உதடுவெடிப்பு, ரத்தம் கசியும் ஈறுகள், வைரல் தொற்று, ஸ்கர்வி நோய்கள் சரியாகும்.
பீட்ரூட்:
நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன.
- மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.
- ரத்தசோகையைக் குணமாக்கும்.
- சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடலாம்.
- பீட்டாசயனின் இதில் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
- மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
- செரிமானப்பாதையை ஆரோக்கியப்படுத்தும்.
- இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
- எலும்பு அடர்த்திக் குறைதல் நோயைத் தடுக்கும்.
- கணையம், மார்பகம், ப்ராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும்.
- இதில் உள்ள நைட்ரிக் அமிலம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
- மறதி நோயைத் தவிர்க்கும்.
கேரட்:
வைட்டமின் ஏ, சி, கே, பி8, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.
- பார்வைத்திறனை அதிகரிக்கும்.
- கொழுப்பைக் கரைக்கும்.
- சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.
- எலும்பு, பற்களுக்கு நல்லது.
- கல்லீரலைப் பலப்படுத்தும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- சருமப் பொலிவு மேம்படும்.
- வயிற்றுப்புண்கள் குணமாகும்.
- செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.
- நுரையீரல், பெருங்குடல், வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.
- இதில் உள்ள தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், உமிழ்நீரை சீராகச் சுரக்கச்செய்து, பற்சொத்தை வராமல் தடுக்கும்.
- ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்தும்.
காலிஃபிளவர்:
- கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும்.ஒரு நாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி நிறைவாக உள்ளது.
- உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
- செரிமானப்பாதையைச் சீர்செய்யும்.
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
- வயிற்று உபாதைகளைச் சரிசெய்யும்.
- தசை வளர்ச்சிக்கு உதவும்.
- நினைவுத்திறனை அதிகரிக்கும்.
- எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்தும்.
- சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும். மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும்.
- பைடோநியூட்ரியன்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், நாட்பட்ட நோய்களின் தீவிரம் குறையும்.
ப்ராக்கோலி
- நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கொழுப்பைக் குறைக்கும்.
- இதயத்தைப் பாதுகாக்கும்.
- அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும்.
- கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்யும்.
- இளநரையைத் தடுக்கும்.மூளையின் திறனை அதிகரிக்கும்.
- அல்சைமரைத் தடுக்கும்.
- ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
- இதில் உள்ள சத்துக்கள், வெண்பூசணியில் உள்ளதால், புரோகோலியை விரும்பாதோர் வெண்பூசனியைச் சாப்பிடலாம்.
முட்டைக்கோஸ்
- ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்யும்.
- சரும நோய்கள் இருப்போர், முட்டைக்கோஸ் சூப் சாப்பிட நச்சுகள் வெளியேறும்.
- கை, கால் நடுக்கம் சரியாகும்.
- நரம்புத்தளர்ச்சி பிரச்னை சரியாகும்.
- வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ளன.
பாகற்காய்
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
- மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
- கல்லீரலைப் பலப்படுத்தும்.வயிற்றில் உள்ள பூச்சிக்களை அழித்து வெளியேற்றும்.
- புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
- சரும நோய்களைக் குணமாக்கும்.
- மாரடைப்பைத் தடுக்கும்.
- உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
- சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.
- கொழுப்பைப் படியவிடாது.
- தொற்றுநோய்களைப் போக்கும்.
- பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.
- உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும்.