$
Soya Mealmaker Benefits: சைவப் பிரியர்களின் ஸ்பெஷல் ஃபுட் லிஸ்ட் எடுத்தால் அதில் காளான், பனீர், மீல் மேக்கர் கண்டிப்பாக இடம்பெறும். மீல் மேக்கரை பலரும் சாதாரண உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். காரணம் இதன் விலை குறைவு என்பதால். மீல் மேக்கரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. சோயா சங்க்ஸ் என அழைக்கப்படும் மீல் மேக்கர் சோயாவுடன் தயாரிக்கப்படுகிறது. சோயாவில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு அந்த மாவை உணவுப் பொருளாக தயாரிக்கப்படுகிறது. மீல் மேக்கரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதில் கொழுப்புகள் கிடையாது.
மீல் மேக்கரில் புரதம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மீல் மேக்கரை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
இதையும் படிங்க: காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!
மீல் மேக்கரில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்

நூறு கிராம் மீல் மேக்கரில் சுமார் 50 கிராம் புரதம் உள்ளது. இவற்றில் சிக்கன், மட்டன் மற்றும் முட்டையை விட அதிக புரதம் உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் இதை இறைச்சிக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக புரோட்டீன் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு மீல் மேக்கர் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
மீல் மேக்கரில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இந்த சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை உடலுக்கு அதிகரிக்கும்.
எடை குறையும்
மீல் மேக்கரில் புரதம் நிறைந்துள்ளது. இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தை குறைக்கிறது. மீல் மேக்கரில் உள்ள புரதம் உடல் கொழுப்பைக் குறைக்கும் மற்றும் எடையைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. கார்போஹைட்ரேட்டுகளை விட சோயா துண்டுகளை ஜீரணிக்க நமது உடல் அதிக சக்தியை செலவிடுகிறது. இதை, அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்பை கரைவதோடு எடையும் குறையும்.
மாதவிடாய் அறிகுறிகள்
குறிப்பாக மாதவிடாய் காலத்தில், பெண்கள் யோனி வறட்சி, மனநிலை மாற்றங்கள், தூக்கக் கலக்கம் மற்றும் இரவில் வியர்த்தல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். சோயா துண்டுகளில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன, இது மாதவிடாய் தாக்கத்தைக் குறைக்க உதவும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஆகும்.
ஹார்மோன் சமநிலை
தொடர்ந்து சோயா துண்டங்களை உட்கொள்வது, ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது. இவற்றில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சீரான மாதவிடாய்க்கு உதவுகிறது. பிசிஓஎஸ் மற்றும் மாதவிடாய் நின்ற பின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீல் மேக்கர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
மீல் மேக்கரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது.
செரிமான அமைப்பு மேம்படும்
மீல் மேக்கர் குடலில் லாக்டோபாகில்லி மற்றும் பிஃபிடோபாக்டீரியாவின் அளவை அதிகரிக்கிறது. இந்த இரண்டு நுண்ணியிரிகளும் செரிமானத்திற்கு உதவுகின்றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
மீல் மேக்கரில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சோயா துண்டுகளை அடிக்கடி சேர்ப்பதன் மூலம் ஏணைய பலன்களை பெறலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு இதயப் பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும்.
இதையும் படிங்க: காய்ச்சல் விரைவில் குணமாக இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!!
மீல் மேக்கரில் இதுபோன்ற ஏணைய பண்புகள் நிறைந்திருந்தாலும் எந்தவொரு புதிய உணவுகளை உண்பதற்கு முன்பும் அதன் தீவிரத்தை உணரும் போதும் மருத்துவரை உடனடியாக அணுகவது சிறந்த முடிவாகும்.
image source: freepik