$
Benefits Of Nilavembu: நாம் அனைவரும் கொரோனா கலகட்டத்தில் நிலவேம்பு குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இது பல ஆயிரம் ஆண்டுகலாக, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிலவேம்பு கசாயம் குடிப்பதற்கு கசப்பாக இருக்கும். இதனை குடிக்கும் போது குமட்டல் ஏற்படும். ஆனால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பல வியாதிகளுக்கு இது ஒரு தீர்வாக இருக்கிறது. அப்படி இந்த மூலிகையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இங்கே விரிவாக காண்போம்.

நீரிழிவு கட்டுப்பாடு
சர்க்கரை நோயாளிகள் தினமும் அரை கப் நிலவேம்பு கசாயம் எடுத்து வர வேண்டும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம், உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
செரிமானம் மேம்படும்
தினமும் வெறும் வயிற்றில் நிலவேம்பு கசாயம் குடித்து வர, செரிமான பிரச்னை தீரும். இது உங்கள் குடல் இயக்கத்தை சீராக்குகிறது. மேலும் குடலில் உள்ள பாக்டீரியாவை அழித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுங்க.! அமோகமா இருப்பீங்க..
இரத்த சோகை நீங்கும்
சில வைரஸ் காய்ச்சல்கள் இரத்த அளவை குறைத்துவிடும். இது போன்ற நேரங்களில், நிலவேம்பு கஷாயம் உங்களுக்கு உதவலாம். இது உங்கள் இரத்த எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் இரத்த சோகை நீங்கும்.

ஆரோக்கியமான கல்லீரல்
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் நிலவேம்பு கசாயம் குடிக்கவும். இது உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
சருமம் ஜொலிக்கும்
தினமும் நிலவேம்பு கசாயம் குடித்து வர சருமம் ஜொலிக்கும். இது உங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிப்பதால், சரும அலர்ஜிகள் நீங்கும். இதனால் சருமம் பிரகாசிக்கும்.
Image Source: Freepik