Lemon Juice Benefits: எலுமிச்சை சாறு தினசரி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

  • SHARE
  • FOLLOW
Lemon Juice Benefits: எலுமிச்சை சாறு தினசரி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

எலுமிச்சை சாறில் நிறைந்துள்ள சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எலுமிச்சை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன, இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன, சிறுநீரக கற்களைத் தடுக்கின்றன. எலுமிச்சை சாறு சிறந்த புத்துணர்ச்சி தரும் பானமாகும். எலுமிச்சம் பழச்சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

தொண்டை வலிக்கு நிவாரணம்

எலுமிச்சை சாறில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது தொண்டையை சுத்தப்படுத்துகிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தொண்டை வலி இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சிறுநீரக கற்கள் வராது

சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் வலியை சொல்லி விளக்க முடியாது. முறையாக தினசரி தண்ணீர் குடித்தாலே இந்த பிரச்சனை வராது. அதேபோல் எலுமிச்சை சாறு சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு மிக நல்லது. எலுமிச்சை சாறு சிறுநீரில் உள்ள சிட்ரேட்டின் அளவை அதிகரித்து சிறுநீரக கற்களை தடுக்கிறது. சிட்ரேட் கால்சியத்துடன் இமைந்து சிறுநீரக் கற்களை தடுக்க உதவுகிறது.

செரிமானத்திற்கு நல்லது

எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை தோலில் பெக்டிக் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கல்லீரலில் செரிமான நொதிகளின் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு எலுமிச்சை சாறு மிகவும் நல்லது. எலுமிச்சை சாறு உங்கள் உடலின் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்

எலுமிச்சை சாறு நார்ச்சத்து நிறைந்தது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். எலுமிச்சம் பழம்சாறு சாப்பிடுவது நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் எலுமிச்சை சாறு குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

எடை குறையும்

எலுமிச்சையில் பெக்டின் உள்ளது. எலுமிச்சை சாறு வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கும். எலுமிச்சை சாற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள குறைந்த அடர்த்தி நார்ச்சத்து உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. எலுமிச்சை சாறு ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களால் உங்கள் செல்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

இதையும் படிங்க: குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?

எலுமிச்சை சாறில் பல்வேறு நன்மைகள் நிறைந்திருந்தாலும் ஏதேனும் தீவிரத்தை சந்திக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Soya Mealmaker Benefits: உடல் எடையை குறைப்பதோடு பல நன்மைகளை வழங்கும் மீல் மேக்கர்!

Disclaimer

குறிச்சொற்கள்