Benefits of Arrowroot Powder: ஆரோரூட் என்பது வேர்த்தண்டு கிழங்குகளில் இருந்து பெறப்படும் மாவுச்சத்து நிறைந்த காய்கறி ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் தூள் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இவற்றை இனிப்பு மற்றும் கார உணவுகளில் பயன்படுத்துவர். இந்த ஆரோரூட் மாவில் ஃபோலேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் நிரம்பி காணப்படுகிறது. இது போன்ற எண்ணற்ற ஆரோக்கியத்தைத் தரும் ஆரோரூட் எளிதாக செரிமானம் அடையும் ஒன்றாகும். எனவே குழந்தைகள், வயது முதிர்ந்தோர் போன்றோர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதில் முக்கியத்துவம் வகிக்கிறது.
ஆரோரூட் மாவு
ஊட்டச்சத்து உள்ளடக்கத்தின் தரவரிசையில் உயர்ந்த இடத்தில் இருப்பது ஆரோரூட் மாவு ஆகும். ஊட்டச்சத்து நிறைந்த ரொட்டிகள், கேக்குகள், பாஸ்தா போன்றவற்றைத் தயாரிப்பதற்கு இந்த ஆரோரூட் மாவு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எளிதில் ஜீரணிக்க கூடிய வகையில் அமையும் இந்த ஆரோரூட் மாவு எடுத்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?
ஆரோரூட் மாவு தரும் ஆரோக்கிய நன்மைகள்
ஆரோரூட்டில் உள்ள பல்வேறு வகை ஊட்டச்சத்துகள், மனித உடலுக்கு சாத்தியமான பயன்பாடுகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க ஆரோரூட் மாவு
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க அரோரூட் மாவு உதவுகிறது. இதற்கு அரோரூட்டில் உள்ள ஃபிளவனாய்டுகள் போன்ற உயிர் வேதியியல் கவலைகளே காரணம். இவை ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளின் அளவை அதிகரித்து, நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
பசையம் அல்லாத உணவு
பசையம் என்பது கம்பு, பார்லி, மற்றும் கோதுமை போன்ற தானியங்களில் காணப்படும் புரதமாகும். குறிப்பாக, கோதுமையே முக்கிய பசையம் சார்ந்த உணவாகக் கருதப்படுகிறது. இதில் பசையம் இருப்பதால் மட்டுமே தண்ணீரை உறிஞ்சிக் கொள்கிறது. இருப்பினும், இந்த வகை பசையம் சார்ந்த உணவை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. அந்த வகையில் ஆரோரூட் பசையம் இல்லாத உணவாகும். பசையம் அல்லாத உணவுப் பொருள்களைத் தயாரிக்க அரோரூட் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்
வாய்க்கு ஆரோரூட் மாவு
வாயில் ஏற்படும் ஈறு அழற்சி போன்றவற்றைக் குணப்படுத்த ஆரோரூட் உதவுகிறது. ஆரோரூட்டில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், இவை பாக்டீரியா எதிர்ப்ப் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும், வாய் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் குணமாக்க ஆரோரூட் மாவு உதவுகிறது.
இதயத்திற்கு ஆரோரூட் மாவு
ஆரோரூட் மாவு இதயத்திற்கு நன்மை பயக்கும் ஒன்றாகும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதயத் துடிப்பை மேம்படுத்துகிறது. மேலும், இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். இதன் மூலம் இதய செயலிழப்பு போன்ற இதய நோய்களைத் தடுக்க முடியும். இருப்பினும் இதயம் தொடர்பான பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது சிறப்பு.
வயிற்றுப்போக்கு குணமாக
ஆரோரூட் தூள் ஆனது, ஃப்ரீபயாடிக்குகளுக்கு ஆதரவாக உள்ளது. குடலில் நல்ல பாக்டீரியாக்களை பராமரிக்க உதவுவதுடன், செரிமானத்திற்கும் உதவியாக இருப்பது ஃப்ரீபயாடிக்குகள் ஆகும். எனவே, இவை வயிற்றுப்போக்கு தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
Image Source: Freepik