Doctor Verified

கிவி, ஆரஞ்சை ஓரம் கட்டும் ‘கொய்யா’ – குடல் பிரச்சனைகளுக்கு டாக்டர் சொன்ன சூப்பர்ஃபுட்!

Guava Benefits for Gut Health: குடல் ஆரோக்கியத்திற்கான கொய்யாவின் நன்மைகளை மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.
  • SHARE
  • FOLLOW
கிவி, ஆரஞ்சை ஓரம் கட்டும் ‘கொய்யா’ – குடல் பிரச்சனைகளுக்கு டாக்டர் சொன்ன சூப்பர்ஃபுட்!

குடல் ஆரோக்கியத்திற்காக கிவி, ஆரஞ்சு போன்ற விலையுயர்ந்த பழங்களை நாடி பலர் செலவு செய்கிறார்கள். ஆனால், இந்தியாவில் எளிதாக கிடைக்கும், மிக மலிவான ஒரு பழம் தான் குடல் நலனுக்கான சிறந்த தீர்வு என்கிறார் பிரபல குடல் நோய் நிபுணர் டாக்டர் பழனியப்பன் மணிக்கம் (Dr. Pal). இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், “கொய்யா குடல் ஆரோக்கியத்திற்கான இயற்கை மருந்து” என அவர் தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.


முக்கியமான குறிப்புகள்:-


100 கிராம் கொய்யாவில் 5 கிராம் நார்ச்சத்து

டாக்டர் பால் கூறுகையில், “100 கிராம் கொய்யாவில் சுமார் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல், மெதுவான செரிமானம் போன்ற பிரச்சனைகளை இயற்கையாக சரிசெய்கிறது” என்று விளக்குகிறார். நார்ச்சத்து அதிகம் உள்ளதால், கொய்யா குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் Prebiotic உணவாகவும் செயல்படுகிறது.

மலச்சிக்கலா?

மலச்சிக்கல் குறித்து வெளிப்படையாக பேச தயங்கும் பலருக்காக, “Struggling with constipation? Guava to the rescue” என்று தனது பதிவில் டாக்டர் பால் குறிப்பிட்டுள்ளார். விலை உயர்ந்த இறக்குமதி பழங்களைத் தவிர்த்து, நாட்டின் பாரம்பரிய ஊட்டச்சத்து பழங்களை மீண்டும் உணவில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் பாதுகாப்பு

கொய்யாவின் Glycemic Index 12–24 மட்டுமே. அதனால், நீரிழிவு நோயாளிகளும் பாதுகாப்பாக சாப்பிடலாம். இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கும். மேலும், இதில் உள்ள Vitamin C & Antioxidants, குடல் அழற்சியை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Health benefits of guava: வயிற்றுப்போக்கிற்கு கொய்யா இலை நல்லதா? நன்மை தீமைகள் இங்கே!

“உத்தரப் பிரதேசத்தில் காஸ்ட்ரோ டாக்டர்களுக்கு வேலை இல்லையோ?”

தனது நகைச்சுவை கலந்த கருத்தில், “இந்தியாவில் கொய்யா உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் முதலிடம். அங்கு குடல் நோய் மருத்தவர்கள் வேலை இல்லாமல் இருக்கலாம்” என்று டாக்டர் பால் கூறியது கவனம் ஈர்த்தது.

View this post on Instagram

A post shared by Dr. Pal Manickam (@dr.pal.manickam)

பசியை கட்டுப்படுத்தும் கொய்யா

கொய்யாவில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு, பசி கட்டுப்பாடு, இரத்த சர்க்கரை அளவு மேம்பாடு போன்றவற்றை ஊக்குவிக்கும். இதனால், எடை குறைக்க விரும்புவோருக்கும் கொய்யா சிறந்த பழம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அறிவியல் ஆதாரம் என்ன சொல்கிறது?

Healthline (2020–2022) ஆய்வுகளின் படி, கொய்யா இலை சாறு – இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, இன்சுலின் எதிர்ப்பு குறைப்பு, கொலஸ்ட்ரால் சமநிலை, இதய நோய் & பக்கவாத அபாயம் குறைப்பு போன்றவற்றை செய்கிறது.

இறுதியாக..

கிவி, ஆரஞ்சு போன்ற விலையுயர்ந்த பழங்களை விட, கொய்யா தான் குடல் ஆரோக்கியத்திற்கான உண்மையான சூப்பர்ஃபுட். டாக்டர் பால் சொல்வது போல, “ஆரோக்கியத்தின் ரகசியம் வெளிநாட்டு உணவுகளில் இல்லை.. நம் ஊர்ப் பழங்களில் தான்!”

Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ நிபுணர்களின் கருத்துகள், சமூக ஊடக பதிவுகள் மற்றும் பொது அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதில் கூறப்பட்ட தகவல்களை பின்பற்றும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது தகுந்த மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

முட்டையில் நச்சு உள்ளதா.? நாமக்கலில் 55 கோழிப் பண்ணைகளில் திடீர் ஆய்வு..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 18, 2025 22:35 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்