$
வயிறு, மார்பகங்கள், இடுப்பு போன்ற உடல் பாகங்களில் தோன்றும் ஸ்ட்ரெட்ச் மார்க், இளம் பருவ வளர்ச்சியின் போதும், உடல் எடை அதிகரித்து குறையும் போதும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்படுகின்றன. இது வலியோ தீங்கோ ஏற்படுத்தாது. இருப்பினிம், ஸ்ட்ரெட்ச் மார்க் எதனால் ஏற்படுகிறது? அது மறைந்துவிடுமா? என மக்களிடியே பல கேள்விகள் நிலவிவருகிறது. இந்த கேள்விகளுக்கு, ஆஸ்டெர் ஆர்வி மருத்துவமனையின், தோல் மற்றும் அழகியல் மருத்துவ ஆலோசகர், மருத்துவர் சுனில் குமார் பிரபு எங்களிடம் விளக்கமளித்துள்ளார்.
ஸ்ட்ரெட்ச் மார்க் மறைந்துவிடுமா?
ஸ்ட்ரெட்ச் மார்க் காலப்போக்கில் மறைந்துவிடும். இருப்பினும், இதற்காக சிகிச்சை பெறுவது, ஸ்ட்ரெட்ச் மார்க்கை விரைவாக போக்கும். ஸ்ட்ரெட்ச் மார்க் என்பது நமது சருமம் நீண்டு அல்லது சுருங்கும் போது ஏற்படும் ஒரு வகை வடு. இந்த திடீர் மாற்றத்தால் நமது தோலை ஆதரிக்கும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவை சிதைந்துவிடும். ஆகையால் இவை மறைய சிறிது நேரம் எடுக்கலாம்.

ஸ்ட்ரெட்ச் மார்க்கை எப்படி அகற்றுவது?
ஸ்ட்ரெட்ச் மார்க் காலப்போக்கில் மறைந்துவிடும். இருப்பினும், மறைந்த பிறகு அவை குறைவாக கவனிக்கப்படலாம். இதனை முழுமையாக அகற்ற சில சிகிச்சைகள் உள்ளன. அவை பின்வருமாறு:
1. ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்கள் தடவலாம்.
2. லேசர் சிகிச்சை.
3. மைக்ரோடெர்மாபிரேஷன்.
4. மைக்ரோ ஊசி.
5. திரியக்க அதிர்வெண் சிகிச்சை.
6. கெமிக்கல் பீல்.
ஸ்ட்ரெட்ச் மார்க் ஆரோக்கியமற்றதா?
உங்களுக்கு ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் இருந்தால், அவை போய்விடும் என்று நீங்கள் விரும்பலாம். உங்கள் தோலில் உள்ள இந்த பள்ளங்கள் அல்லது கோடுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் அவை பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. மேலும் அவை உண்மையில் மறைந்துவிடாது என்றாலும், அவை காலப்போக்கில் அல்லது சில தயாரிப்புகள் மற்றும் நடைமுறைகளின் உதவியுடன் தான் மறைக்க முடியும் என்று மருத்துவர் கூறினார்.
இதையும் படிங்க: Hair Transplant Myths: முடி மாற்று அறுவை சிகிச்சை பற்றி மக்களிடையே நிலவும் கட்டுக்கதைகள்
ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படும் காரணம் என்ன?
மரபியல் மற்றும் தோலில் ஏற்படும் அழுத்தத்தின் அளவு உட்பட பல காரணிகளால் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏறடுகிறது. மேலும் இதற்கு உங்கள் ஹார்மோன் கார்டிசோலின் அளவும் ஒரு பங்கு வகிக்கலாம் என்று மருத்துவர் கூறினார். கார்டிசோல் என்பது அட்ரீனல் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஆகும்.

மன ஆரோக்கியத்தின் மீதான விளைவு
ஸ்ட்ரெட்ச் மார்க் பொதுவாக கர்ப்பத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், தோல் புண்களின் நிரந்தரத்தன்மை கர்ப்பிணிப் பெண்களுக்கு கணிசமான சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர் கூறினார். மேலும் இது கர்ப்பம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எதிர்மறையாக பாதிக்கும். சில நேரங்களில் இது சுயமரியாதை மற்றும் ஆடைத் தேர்வை பாதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஸ்ட்ரெட்ச் மார்க்கால் ஏற்படும் கவலை பெரினாட்டல் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். இது கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு முன்னோ அல்லது பின்னோ, கவலையை ஏற்படுத்தும் ஒரு நிலை ஆகும். இதற்கு ஸ்ட்ரெட்ச் மார்க் மீது கவனம் செலுத்துவதும் அதற்கான தீர்வு காண மருத்துவரை அணுகுவது நல்லது என மருத்துவர் சுனில் குமார் கூறினார்.
Image Source: Freepik