Doctor Verified

Thyroid Foods: உஷார்! தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவெல்லாம் தொடவே கூடாது

  • SHARE
  • FOLLOW
Thyroid Foods: உஷார்! தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவெல்லாம் தொடவே கூடாது


இது குறித்து ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் சவலியா அவர்களின் கூற்றுப்படி, “சில உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உணவுகளைச் சாப்பிடும் முன்பு கவனமாக இருக்க வேண்டும். இந்த வகை உணவுகளில் உள்ள கோய்ட்ரோஜன்கள் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை சீர்குலைக்கலாம். இந்த உணவுகள் குறித்து தைராய்டு நோயாளிகளுக்கு பல்வேறு நன்மை பயக்கும் உணவுகள் குறித்தும் தீங்கு விளைவிக்கும் உணவுகள் குறித்தும் கூறியுள்ளார்.”

இந்த பதிவும் உதவலாம்: Red Banana Eating Time: செவ்வாழைப் பழம் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?

தைராய்டு நோயாளிகள் சாப்பிடக் கூடாத உணவுகள்

தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.

பாதாம்

பாதாமில் மக்னீசியம் மற்றும் செலினியம் நிறைந்துள்ளது. இது தைராய்டுக்கு மிகவும் நல்லதாகும். எனினும் பாதாம் ஒரு கோய்ட்ரோஜெனிக் நிறைந்த உணவாகும். எனவே இதை அதிகம் உட்கொள்வது தைராய்டு சுரப்பியின் அயோடினை உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது. எனவே தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் தினமும் 3-5 பாதாம் சாப்பிடலாம்.

ராகி

இதில் கால்சியம், நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது கோயிட்ரோஜெனிக் உணவு என்பதால் இதை ஊறவைத்து நன்கு சமைத்த பிறகு எப்போதாவது சாப்பிடலாம். எனினும் பச்சை ராகியை உட்கொள்வது நிலையை மோசமாக்கலாம்.

வேர்க்கடலை

வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் வேர்க்கடலையில் கோய்ட்ரோஜன் உள்ளது. இது ஹைப்போ தைராய்டிசத்தின் நிலையை மோசமாக்கலாம். ஏனெனில் இது அயோடின் உட்கொள்ளலில் தலையிடுகிறது. எனவே ஹைப்போ தைராய்டு நோயாளிகள் வேர்க்கடலை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கோதுமை

இது ஒரு பசையம் உள்ள உணவாகும். மேலும் இது கோயிட்ரோஜெனிக் உணவாகும். எனவே ஆட்டோ இம்யூன் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படின், கோதுமை நுகர்வு குறைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black Ginger Benefits: கருப்பு இஞ்சியின் நம்ப முடியாத ஆரோக்கிய நன்மைகள்!

சோயா

இந்த உணவுகள் தைராய்டு ஹார்மோன்களை சரியாக உறிஞ்சி தைராய்டு அறிகுறிகளை ஏற்படுத்தும் உடலின் திறனை பாதிக்கலாம். சோயா அடிப்படையிலான உணவுப் பொருள்கள் தைராய்டு சுரப்பியை எரிச்சலூட்டுகிறது. இதிலும் கோய்ட்ரோஜன்கள் காணப்படுகிறது. எனவே சோயா பொருள்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தைராய்டு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்

  • தேங்காய்
  • பிரேசில் கொட்டைகள்
  • சூரியகாந்தி விதைகள்
  • பூசணி விதைகள்
  • கொத்தமல்லி
  • மூங் தால்

தைராய்டு நோயாளியாக இருப்பின் நிபுணர்களின் ஆலோசனைப்படி இந்த உணவுப்பொருள்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவில் எந்த உணவையும் சேர்ப்பதற்கு முன்பு சுகாதார நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Ghee In Summer: இந்த காரணத்துக்காக கோடையில் நீங்க கண்டிப்பா நெய் எடுத்துக்கணும்

Image Source: Freepik

Read Next

Easter Foods: ஈஸ்டரில் ஆரோக்கியமாக இருக்க என்ன சாப்பிடலாம்?

Disclaimer