Side Effects Foods: இன்றுவரை நீங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களைப் பற்றி படித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். ஊட்டச்சத்துக்கள் உடல் சீராக செயல்பட உதவுகின்றன, ஆனால் பியூரின்கள் எனப்படும் ஒரு வேதியியல் சேர்மம் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், இந்த தகவல் உங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
உண்மையில், பியூரின் என்பது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் ஒரு வேதியியல் சேர்மம் ஆகும். இது தாவர அடிப்படையிலான உணவுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. பியூரின் கலவை நிறமற்ற மற்றும் படிக வடிவத்தில் காணப்படுகிறது. இது செரிமான செயல்பாட்டின் போது யூரிக் அமிலமாக உடைகிறது. பியூரின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த நிலையில், ஒருவருக்கு மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் விறைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். அதிக பியூரின் உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தி கூறிய தகவலை பார்க்கலாம்.
மேலும் படிக்க: Belly Fat Reasons: குறைவான உணவை சாப்பிட்ட பிறகும் தொப்பை அதிகரிப்பதற்கு என்ன காரணம்!
அதிக ப்யூரின் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் என்ன பிரச்சனைகள் வரும்?
கீல்வாதம் பிரச்சனை
கீல்வாதம் என்பது ஒரு வகை மூட்டுவலி பிரச்சனையாகும், இது திடீரென்று கடுமையான மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
சிறுநீரக கற்கள்
பியூரிக் அமில அளவு அதிகரிப்பு சிறுநீரக கற்கள் வளரும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
சிறுநீரக பாதிப்பு பிரச்சனை
அதிகப்படியான யூரிக் அமிலம் சிறுநீரக திசுக்களை சேதப்படுத்தி சிறுநீரக செயல்பாட்டை சீர்குலைக்கும்.
உடலில் அதிக பியூரின் இருப்பதால் யூரிக் அமிலம் அதிகரிப்பது பிரச்சனை ஆக மாறக்கூடும். யூரிக் அமிலம் அதிக அளவில் குவிந்து, பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எந்த உணவுப் பொருட்களில் பியூரின் அதிகமாக உள்ளது? எந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது?
- உறுப்பு இறைச்சிகள். அதாவது கல்லீரல், சிறுநீரகம் போன்ற பாக இறைச்சிகளை தனித்து அதிகமாக உட்கொள்ளக் கூடாது.
- சிவப்பு இறைச்சிகள். அதாவது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.
- கோழி இறைச்சிகள். அதாவது வான்கோழி மற்றும் கோழி இறைச்சிகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. குறிப்பாக உறுப்பு இறைச்சிகளை அதிகம் சாப்பிடக் கூடாது.
- குறிப்பிட்ட மீன் வகைகளை அதிகம் உட்கொள்ளக் கூடாது. அதாவது கானாங்கெளுத்தி, ஹெர்ரிங் மற்றும் டிரவுட் போன்ற மீன் வகைகளை அதிகம் சாப்பிடக் கூடாது.
- பருப்பு வகைகளும் இதில் அடங்கும். பயறு வகைகள், கொண்டைக்கடலை மற்றும் கருப்பு பீன்ஸ் ஆகியவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது.
- காளான்களும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஷிடேக் மற்றும் போர்டோபெல்லோ போன்ற சில வகைகள் இதில் அடங்கும்.
- பீர் அதிகம் குடிக்கக் கூடாது. இதில் பியூரின்கள் அதிகம் இருக்கிறது.
- பீர் மட்டுமல்ல மது வகைகளும் இதில் இடங்கும். குறிப்பாக சிவப்பு ஒயின் போன்ற சில ஒயின்களில் பியூரின்கள் அதிகம் இருக்கிறது.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதற்கு மட்டுமல்ல மொத்தமாகவே உடல் ஆரோக்கியத்திற்கு இதை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க: தண்ணீர் குடிச்சா வாயில் வரக்கூடிய இந்த பிரச்சனைகள் எல்லாம் வராதாம்!
எந்த உணவுகளில் பியூரின்கள் குறைவாக உள்ளன?
- பெரும்பாலான பழங்களில் பியூரின் அளவு குறைவாக உள்ளது.
- பசலைக் கீரை, காலார்ட் கீரைகளில் பியூரின்கள் குறைவாக உள்ளன.
- பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களில் பியூரின்கள் குறைவாக உள்ளன.
- பழுப்பு அரிசி, குயினோவா மற்றும் முழு கோதுமை ரொட்டி போன்ற முழு தானியங்களில் பியூரின்கள் குறைவாக உள்ளன.
- காளான்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற காய்கறிகளைத் தவிர, பெரும்பாலான காய்கறிகளில் பியூரின்கள் குறைவாகவே உள்ளன.
பியூரின்களால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஒரு சீரான உணவை உட்கொள்ள வேண்டும். கூடுதலாக, நீங்கள் ஒரு சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
image source: freepik