சில உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் நாம் அவற்றை உட்கொள்ளும் முறையைப் பொறுத்தது. இதுபோன்று பல உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் பேரீச்சம்பழமும் ஒன்று. பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை எடுத்துக்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. ஆனால், இவற்றை காலை உணவோடு சேர்த்து சாப்பிட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
Eating Dates With Breakfast Can Have Many Benefits
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்:
பேரிச்சம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் கே உள்ளன. இவை உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இவற்றை உட்கொள்வதால் செல்கள் சேதமடையாது. அதேபோல சிலருக்கு இனிப்புகள் மீது ஆசை இருக்கும். இவற்றை உண்பதன் மூலம் இவற்றில் உள்ள இயற்கையான இனிப்பு சுவை, இனிப்பு மீதான உங்களுடைய காதலை தணிக்க உதவும். மேலும் நல்ல ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்ட பாசிட்டிவ் உணர்வும் உங்களுக்கு கிடைக்கும்.
எலும்புகளின் வலிமை:
பேரீச்சம்பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளது. இவை அனைத்தும் எலும்புகளை வலுவாக்கும். இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இவற்றைக் கொடுப்பது நல்லது. மேலும் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இதன் விளைவாக, குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் புத்திக்கூர்மை அதிகரிக்கிறது.
ஆற்றல்:
சில நேரங்களில் எதுவும் செய்யாமல் சோர்வாக இருக்கும். எந்த வேலையும் செய்ய முடியாமல் சோம்பலாக உணர்வீர்கள். சின்ன சின்ன வேலைகளைச் செய்தால் கூட உடல் பலவீனமாக இருப்பது போல் தோன்றும். சிலருக்கு நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது என எல்லாமே சவாலாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு பேரீச்சம்பழம் மிகப்பெரிய வரப்பிரசாதம். காலை உணவுடன் 2 அல்லது 3 பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்ல எனர்ஜி கிடைக்கும்.
Eating Dates With Breakfast Can Have Many Benefits
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளே! இனிப்பை பார்த்தாலே ஆசையைக் கட்டுப்படுத்த முடியலையா? - இத ட்ரை பண்ணுங்க!
செரிமான கோளாறுகள்:
இன்றைய காலகட்டத்தில் சரியான வாழ்க்கை முறை இல்லாததால் செரிமான பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிறு உப்பசம் இவற்றைச் சரிபார்க்க பேரீச்சம்பழம் உதவுகின்றன. காலை உணவுடன் 2 பேரீச்சம்பழம் சாப்பிடுங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். மலச்சிக்கல் பிரச்சனை இருக்கவே இருக்காது.
வெயிட் லாஸ்:
முன்பே சொன்னது போல இதில் நார்ச்சத்து அதிகம். இவற்றை சாப்பிட்டால் வயிறு நிரம்புகிறது. இதனால் எடை அதிகரிக்காது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் கலோரிகளை எரிக்கிறது.
புற்றுநோய் ஆபத்து:
பேரிச்சம்பழத்தில் பீட்டா டி-குளுக்கன் என்ற உயிரியக்க தாவர கலவை உள்ளது. அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன. இவற்றுடன் பிபி மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதன் இனிப்பு சுவை ஆரோக்கியமானதாகவே இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் குறைவாகவே சாப்பிட வேண்டும்.
Image Sourc: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version