$
Cancer Symptoms Prevention And Treatment: பெரும்பாலான மக்கள் குணப்படுத்தும் சிகிச்சையை வழக்கமாக நம்புகின்றனர். எனினும் கொரோனா தொற்று நோய், தடுப்பு பராமரிப்புக்கு ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. உலகளவில் இறப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் அமைகிறது. எனவே, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். மேலும், புற்றுநோயைப் பற்றி முழுமையாக அறிந்து, தேவை ஏற்பட்டால் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது புற்றுநோயைத் தடுப்பதற்கு சாத்தியமாக அமையும். மேலும், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு
புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் 30 முதல் 50% வரை தடுக்கப்பட்டிருக்கலாம். இது ஆபத்தை முன்கூடியே கண்டறிந்து, சான்று அடிப்படையிலான தடுப்பு யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும். பெரும்பாலும், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் புற்றுநோய் ஏற்படலாம். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள், குழந்தைகளுக்குக் கற்பித்து ஊக்குவிக்க வேண்டும். கிராமப்புறங்களில் முகாம்களை ஏற்படுத்தி சுகாதார வளங்கள் இல்லாத மக்களைச் சென்றடைய ஒரு சிறந்த வழியாகும். மேலும் புற்றுநோய்க்கான காரணிகள் என்னென்ன என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் மார்பகம், கர்ப்பப்பை, வாய், இரைப்பை, நுரையீரல், பெருங்குடல் போன்ற புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் விழிப்புணர்வு, அறிகுறிகள், கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து சிட்டி எக்ஸ் ரே & ஸ்கேன் கிளினிக் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் மற்றும் நோயியல் நிபுணர் ஆலோசகர் டாக்டர் சுனிதா கபூர் அவர்கள் விளக்கியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Cancer Symptoms: சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
முன்கூட்டியே கண்டறிதல்
கேன்சர் கண்டறிய வாரங்கள், சில சமயங்களில் மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நாள்கள் எல்லாம் போய்விட்டன. வீட்டை விட்டு வெளியேறாமல் மருத்துவரின் சந்திப்புகளை மெய்நிகர் முறையில் பதிவு செய்து தொழில்நுட்பம் மூலம் மருத்துவரை இணைவதற்கான செயல்முறை எளிதாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் உபகரணங்கள் மற்றும் கண்டறிதல் உள்ளிட்ட சோதனை செயல்முறைக்கு துல்லியத்தைக் கொண்டு வந்துள்ளது. இவை தொடர்புடைய குறிப்பான்களில் இருப்பின், அதன் அடிப்படையில் உடலில் புற்றுநோய் செல்களின் தோற்றத்தைக் கண்டறிந்து துல்லியமான நோயறிதலைக் கொடுக்க உதவுகிறது.
புற்றுநோய் அறிகுறிகள்
சில அறிகுறிகள் புற்றுநோயினை முன்கூட்டியே எச்சரிக்கின்றன. இந்த நேரத்தில் மருத்துவரின் உதவியுடன் புற்றுநோய் எச்சரிக்கை அறிகுறிகளில் ஏதேனும் வளர்ச்சி பொதுவானதாக இருப்பினும் புறக்கணிக்கப்படக்கூடாது. அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.
- மார்பகத்தில் கட்டி ஏற்படுவது நீர்க்கட்டி காரணமாக இருக்கலாம். இது பொதுவாக தானாகவே நீங்கி விடும். எனினும், சில சமயம் இது புற்றுநோயாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அறிமுகமில்லாத பிரச்சனைகளை அனுபவிக்கும் போது மருத்துவரை அணுகுவது நல்லது.
- அசாதாரணமான நிகழ்வு நடக்கும் போது உடல் அசாதாரண அறிகுறிகளைச் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் ஏற்படும் அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும்.
- குடும்பத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- இந்த நாள்களில் மக்கள் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய மரபணு சோதனையைப் பயன்படுத்தலாம். மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளை இந்த முறை மூலம் கண்டறியலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cancer Causing Foods: எந்தெந்த உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்?
புற்றுநோய் சிகிச்சை முறைகள்
புற்றுநோயைச் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நீண்ட தூரம் செல்கிறது. ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்குவது செலவு குறைந்ததாகும். ஆனால் உயிர் பிழைப்பதற்கான அதிக நிகழ்தகவு மற்றும் நோயுற்ற தன்மையைக் குறைக்கிறது. மேலும், சிகிச்சை நெறிமுறைக்கு நேர்மறையான அணுகுமுறையை வளர்ப்பது அவசியம் ஆகும்.
நோயறிதல் செய்யப்படும் நிலை, இருப்பு, வயது, பாலினம் மற்றும் இன்னும் பிற காரணிகளின் அடிப்படையில் சிகிச்சை முறை அமைகிறது. சில சமயங்களில் வீரியம் மிக்கதாக இருப்பின் நோயிலிருந்து விடுபட முடியாமல் போகலாம். இந்த நேரத்தில் நோய்த் தடுப்பு சிகிச்சையை வழங்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மருத்துவ நிபுணர்களால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற புற்றுநோயியல் நிபுணரிடம் இருந்து உதவியை பெறுவதன் மூலம் பாதுகாப்பாக இருப்பதை உணரலாம்.
முடிவுரை
2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் 8.5 லட்சம் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் ஏற்படுவதால் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, இவற்றை ஒரு போதும் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குடும்ப உறுப்பினர்களுக்கு குறிப்பாக வீரியம் மிக்க புற்றுநோய் கொண்டவர்களுக்கு இது மிக முக்கியமானதாகும். மேலும், விழிப்புணர்வற்ற நடைமுறைகள் தாமதமான நோயறிதலுக்கு வழிவகுக்கிறது. எனவே சரியான விழிப்புணர்வுடன், மருத்துவரை அணுகி ஸ்கிரீனிங் மற்றும் சோதனைகளை மேற்கொள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer Symptoms: எலும்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்
Image Source: Freepik